கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள பரம்பிக்குளம் பகுதியில் உள்ள வனப்பகுதியை ஒட்டி ஐம்பதுக்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டி குடியிருப்பு உள்ளதால், அங்கு புள்ளிமான், மயில், முயல் வன உயிரினங்கள் வருகை தருவது வழக்கம்.
அவற்றில் சில, மலைவாழ் மக்களின் உணவை உண்டு செல்கின்றன. இந்த நிலையில், அப்பகுதியில் வளர்க்கப்படும் செம்மி எனும் பூனையும், வனப்பகுதியிலிருந்து வரும் முயலும் நாளடைவில் நண்பர்களாகி உள்ளன.
தற்போது அவை ஒன்றாக விளையாடி, உணவும் உட்கொள்கின்றன. அந்த முயலுக்கு அப்பகுதி மக்கள் மோட்டோ எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். தற்போது அந்த மோட்டோ, செம்மியின் காணொலி வைரலாக பரவிருகிறது.
இதையும் படிங்க: ஊரடங்கு எதிரொலி: சாலையில் ஹாயாக சுற்றித்திரிந்த அரியவகை விலங்கு!