கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள சித்திரைச் சாவடி பகுதியில் பிரபல ஃபார்முலா 1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஒரு பகுதியை கடந்த பல ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தோட்டத்தின் உரிமையாளர் பிரித்விராஜ்குமார் என்பவர் வழிப்பாதையாக பயன்படுத்தி வந்துள்ளார்.
இதனையடுத்து வழித்தடமாக தனது நிலத்தை பயன்படுத்தக் கூடாது என நரேன் கார்த்திகேயன் தரப்பு கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், நரேன் கார்த்திகேயன் தரப்பினர் வழிப்பாதையை மறைத்து வேலியமைத்துள்ளனர்.
இதையடுத்து பிரித்விராஜ்குமார் தரப்பு அந்த வேலியில் வழிப்பாதை செல்லும் பகுதியில் மட்டும் வேலியை வெட்டியுள்ளனர். மேலும் பிரித்விராஜ்குமார் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரையடுத்து காவல்துறையினர் நரேன் கார்த்திகேயன் மீது ஐ.பி.சி 339 என்ற பிரிவின் கீழ் (முறையற்ற தடுப்பை ஏற்படுத்துதல்) வழக்கு பதிவு செய்தனர். இதே போல் நரேன்கார்த்திகேயன் நிறுவனத்தில் பணிபுரியும் கோகுல் என்பவர் கொடுத்த புகாரின் பேரிலும் பிரித்விராஜ்குமார் மீதும் தடுப்பை வெட்டியாதாக காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார் நரேன் கார்த்திகேயன்!