சென்னை: கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 34 வயது தொழிலதிபரான பெண், முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம், அவரது மருமகனான அருண் பிரகாஷ் உள்பட 5 பேர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிந்துஜா, "கோவை நவஇந்தியா அருகே சாக்லேட் பேக்டரி வைத்து நடத்தி வருகிறேன். 2014 ஆம் ஆண்டு பி.எஸ்.ஜி நிறுவன உரிமையாளருடன் திருமணம் நடந்து விவகாரத்து ஆனது.
எம்.எல்.ஏ மருமகனின் லீலை
முன்னாள் கணவரின் அலுவலகத்தில் பணிப்புரிந்த அருண் பிரகாஷ் என்பவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி என்னுடன் பழகினார். நாளடைவில் இருவரும் சேர்ந்து தனியாக குடும்பம் நடத்தினோம். அதில் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
முறைப்படி என்னைத் திருமணம் செய்து கொள்வதாக அருண் கூறியதை நம்பி, அவருக்கு 7 கோடி ரூபாய் வரை செலவு செய்தேன். மேலும், 3 கார்கள் எனது பெயரில் வங்கிக் கடன் மூலம் வாங்கி கொடுத்தேன்.
காதலி வீடு புகுந்து காதலன் தாக்குதல் - ஷாக்கிங் சிசிடிவி காட்சி
ஏமாற்றம்
நாளடைவில் அருண்பிரகாஷ் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்ததால், சந்தேகமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது, அருண் தான் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான கோவை தங்கத்தின் மருமகன் எனக்கூறி மிரட்டி, வெளியே சொன்னால் உனது ஆபாச படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டினார்.
மேலும் கோவை தங்கம், அவரது மகள், அருண் பிரகாஷ் ஆகியோர் அடியாட்களுடன் வந்து என்னையும், எனது குடும்பத்தினரையும் தாக்கிவிட்டுச் சென்றனர். இதுகுறித்து புலியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, அருண் பிரகாஷை வரவழைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
கொலை மிரட்டல்
அப்போது ஒரு வருடத்தில் 1.5 கோடி ரூபாயை தருவதாக அவர் ஒப்புகொண்டார். இதனையடுத்து அடுத்த நாளே கோவை தங்கம் தனது அடியாட்களுடன் வந்து வழக்கை வாபஸ் வாங்கு, இல்லையென்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி சென்றனர்.
கொலை செய்துவிடுவதாக மிரட்டிய கோவை தங்கம், அருன் பிரகாஷ், உள்பட 5 பேர் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு அளிக்ககோரி டிஜிபியிடம் புகார் அளித்துள்ளேன்" என்று அவர் கூறினார்.