கோவையில் 100 அடி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு பாலம் மிக உயரமாக உள்ளதால் இதனை விண்வெளிக்கு செல்லும் பாலம் என்றெல்லாம் சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்துவருகின்றனர்.
மேலும் இது இருசக்கர வாகனம் மற்றும் கார், டெம்போ மட்டும் செல்லும் வகையில் குறுகலான பாலமாக உள்ளது. இதில் பேருந்துகள், லாரிகள் போன்ற பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் தொடக்க நிகழ்ச்சிக்காக அரசு பேருந்து ஒன்றை பாலத்தின் முன்பு நிறுத்தினர். இதனை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பாலத்தின் மேலே ஏறிய வாகனம் திரும்பி வருகையில் வெளியே வரமுடியாமல் விழாவிற்காக கட்டப்பட்ட பேனரின் காரணமாக சிக்கிக்கொண்டது. இதனையடுத்து அவசர அவசரமாக பேனரை அகற்றி பேருந்து வெளியே வர வழி அமைத்துக்கொடுத்தனர்.
இதையும் படிங்க:
பவானிசாகர் அணை முன்பு புதிய பாலம்: கட்டுமானப் பணிகள் தொடக்கம்!