ETV Bharat / city

‘தமிழ்நாட்டில் தாய்ப்பால் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது’

கோவை: தமிழ்நாட்டில் தாய்ப்பால் தானம் அதிகரித்துள்ளதாக ‘கோயம்புத்தூர் பேரன்டிங் நெட்வர்க்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NGO
author img

By

Published : Jul 30, 2019, 6:32 PM IST

ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை கோவை பேரன்டிங் நெட்வொர்க் என்ற தனியார் தொண்டு நிறுவன நிர்வாக அறங்காவலர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய நிர்வாகிகள், தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 3, 4ஆம் தேதியில் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் கண்காட்சி நடத்த உள்ளதாக தெரிவித்தனர். இந்த கண்காட்சியில் குழந்தைகள் பயன்படுத்திய பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் பணம் பொது சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்றனர்.

அமைப்பினரின் பேட்டி

தாய்ப்பால் குறித்து, "அச்சம் இல்லை" என்ற தலைப்பில் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்படும் எனவும், ஏழு நாட்களுக்கு இது போன்ற பதிவுகள் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தாய்ப்பால் தானம் அதிகரித்துள்ளதாகவும், அவ்வாறு பெறப்படும் தாய்ப்பால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர். தாய்ப்பால் தானம் குறித்து கல்லூரி மாணவ மாணவிகள் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைப்பினர் கூறினர்.

Intro:தமிழகத்தில் தாய்ப்பால் தானம் அதிகரித்துள்ளதாக தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்Body:ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது தாய்ப்பால் வாரம் தொடர்பாக கோயமுத்தூர் பேரன்டிங் நெட்வொர்க் என்ற தனியார் தொண்டு நிறுவன நிர்வாக அறங்காவலர்கள் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்வாகிகள் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 3 மற்றும் 4ஆம் தேதியில் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் கண்காட்சி நடத்த உள்ளதாகவும் இதில் குழந்தைகள் பயன்படுத்திய பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் பணம் பொது சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும், தாய்ப்பால் குறித்து " அச்சம் இல்லை" என்ற தலைப்பில் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் ஏழு நாட்களுக்கு இது போன்ற பதிவுகள் நடைபெறும் எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தாய்ப்பால் தானம் அதிகரித்துள்ளதாகவும் அவ்வாறு பெறப்படும் தாய்ப்பால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படுவதாக தெரிவித்தனர் மேலும் கண்காட்சியின்போது குழந்தைகளை அரவணைத்து தாய்மார்கள் நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாகவும் தாய்ப்பால் தானம் குறித்து கல்லூரி மாணவ மாணவிகள் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.