சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மத்திய அரசு மக்களுக்குச் செய்துள்ள திட்டங்களை எடுத்துக்கூறும் வகையில் கோவை மாவட்ட பாஜக சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
பேரணியை நடிகையும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான கவுதமி தொடங்கிவைத்தார். இதில் மாவட்டத் தலைவர் நந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்தப் பேரணியானது கோவை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் எதிரே தொடங்கி பார்கேட், நஞ்சப்பா ரோடு அவினாசி சாலை, லட்சுமி மில்ஸ் சந்திப்பு, அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, ஆவாரம்பாளையம் சாலை வழியாக கணபதி சென்று சிவானந்தாபுரத்தில் நிறைவடைந்தது.