ETV Bharat / city

வானதிக்கு உற்சாக வரவேற்பு அளித்த பாஜக தொண்டர்கள் - வானதிக்கு உற்சாக வரவேற்பு

கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற வானதி சீனிவாசனுக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

BJP members welcome to Vanathi Srinivasan

author img

By

Published : May 3, 2021, 10:53 PM IST

சட்டப்பேரவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் 53 ஆயிரத்து 209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜக கைப்பற்றிய நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதியாக தெற்கு தொகுதி இருக்கிறது.

இந்நிலையில், இன்று (மே. 3) கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்ற வானதி சீனிவாசனுக்கு பாஜக தொண்டர்கள், மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

ஆனால், வெற்றிக் கொண்டாட்டங்கள் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், காவல்துறையினர் பாஜக அலுவலகம் முன்பு இருந்த தொண்டர்களிடம் முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு செய்தனர்.

இருப்பினும் வானதி சீனிவாசன் வரும்பொழுது தொண்டர்கள் கூடியதால் அங்கு கூட்டம் அலைமோதியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.