ETV Bharat / city

மதுக்கரை வனச்சரகத்தில் சிகிச்சை பலனின்றி கரடி உயிரிழப்பு - மங்கலப்பாளையம் வனப்பகுதியில் கரடி உயிரிழப்பு

கோவை: மதுக்கரை வனச்சரகத்தில், வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆண் கரடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

மதுக்கரை வனச்சரகத்தில் சிகிச்சை பலனின்றி கரடி உயிரிழப்பு

author img

By

Published : Oct 24, 2020, 11:46 AM IST

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட மங்கலப்பாளையம் வனப்பகுதியில் நேற்று வயது முதிர்ந்த ஆண் கரடி நடக்க முடியாமல் படுத்துக் கிடந்தது. இதனையறிந்த வனத்துறையினர் கரடியை மீட்டு சாடிவயல் யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர்.

பின்பு வனத்துறை மருத்துவர் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் கரடி இன்று அதிகாலை 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதனையடுத்து உடற்கூராய்விற்கு பிறகு, கரடியின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், "பொதுவாக கரடியின் வாழ்நாள் 15 முதல் 18 ஆண்டுகள் வரை இருக்கும். தற்போது இந்த கரடிக்கு 15 வயது ஆவதால், வயது முதிர்வு காரணமாகவே கரடி உயிரிழந்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: நேரலையை ஸ்தம்பிக்க வைத்த பாண்டாவின் பிரசவம் - வாழ்த்து மழையில் நனைந்த பாண்டா குட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.