கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அருண் பிரசாத்(28). இவர் நேற்று காலையில் சவாரிக்குச் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களிடம் வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது. அதனையடுத்து கீரணத்தம் அருகே டீ குடிக்க வந்த அருண் பிரசாத்தை பின் தொடர்ந்து வந்த சிலர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
அருகில் இருந்தவர்களின் உதவியுடன் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் செல்லும் வழியிலியே உயிரிழந்தார். இது குறித்து கோவில்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அருண் பிரசாத்தின் உடலை வாங்க மறுத்து ஆட்டோ ஓட்டுநர்களும் அவரது உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சமூகத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும் அவரது குடும்பத்திற்கு அரசு உரிய நிதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர்களிடம் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலைந்து சென்றனர்.
இதையும் படியுங்க: