ETV Bharat / city

வேளாண் சட்டங்கள் வேண்டும் என்று உழவர் கேட்கும் காலம் வரும் - அண்ணாமலை

வேளாண் சட்டங்கள் வேண்டும் என்று உழவர் கேட்கும் காலம் வரும்; அந்த நம்பிக்கை உள்ளது. அப்போது இச்சட்டங்களைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுப்போம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
author img

By

Published : Dec 3, 2021, 7:36 AM IST

கோயம்புத்தூர்: அன்னூர் அருகே டிட்கோ சார்பில் 3800 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்க உழவர் நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து ஐந்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்திவரும் சூழலில் அன்னூர் பகுதியில் உள்ள குன்னிபாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வாக்கனாங் கொம்பு, ஆத்திக்குட்டை, குழியூர் ஆகிய ஐந்து கிராம உழவரை அண்ணாமலை நேரில் சந்தித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களிடையே பேசினார்.

அப்போது அத்திக்கடவு திட்டத்தினால் நீர் பற்றாக்குறை தீர்ந்து வேளாண்மை செழிக்கும் சூழலில் தொழில்பேட்டைகளை வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது என்பது உழவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்பேட்டையை நீர் இல்லாத வறட்சியான பகுதிகளில் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அவர் இதற்காக பாரதிய ஜனதா எந்த அளவிற்கும் போராட்டத்தை முன்னெடுக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும் தொழிற்பேட்டை அமைக்க வேளாண் நிலத்தைக் கையகப்படுத்தினால் கிராமங்களில் சாதிச் சண்டைகள் உருவாகும் என கிராம மக்கள் மத்தியில் பேசிய அவர் தொடர்ந்து கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் வாக்கனாங் கொம்பு, ஆத்திக்குட்டை ஆகிய கிராமங்களில் அண்ணாமலை கன்னடத்தில் பேசினார்.

விவசாயிகளுடனான சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை “அன்னூர் வட்டாரத்தில் 3,800 ஏக்கர் விளைநிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகம் சார்பில் வலுக்கட்டாயமாக முயற்சி எடுத்துவருகின்றனர். இங்குள்ள நீர்வளத்தைக் குறிவைத்து தொழிற்பேட்டை அமைக்க முயற்சிக்கின்றனர்.

இங்குள்ள உழவரை வேளாண்மை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வானம் பார்த்த பூமி உள்ள பிற இடங்களில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். இங்கு அமைக்கக் கூடாது. அதையும் மீறி தொழிற்பேட்டை அமைக்க முயற்சி செய்தால், போராட்டங்களை நடத்த பாஜக தயங்காது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெட்ரோல் விலையைக் குறைப்பதாக எப்போதும் சொல்லவில்லை. ஆனால், பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளார். மத்திய அரசு விலையைக் குறைத்து, மாநில அரசு விலையைக் குறைக்காவிட்டால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவருக்குத் தெரியும்.

தமிழ்நாட்டில் பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4உம் குறைப்பதாகத் தெரிவித்த திமுக அரசு, அதற்கேற்ப விலையைக் குறைக்கவில்லை. ஏனெனில், இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. வேளாண் சட்டங்கள் தவறானவை கிடையாது. ஒரு உழவனுக்கு உண்மையாகவே, அவர் விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை வேண்டும் என்றால் வேளாண் சட்டம் இன்றியமையாதது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன.

விவசாயிகளே இந்தச் சட்டங்கள் வேண்டும் என்று கேட்பார்கள் என்ற காலம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது அதைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுப்போம். அதிமுக-பாஜக கூட்டணியில் எந்தப் பிளவும் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் தெளிவாக இருக்கிறோம்.

சில சில சட்டங்கள் குறித்து எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். காரணம், அவர்கள் ஒரு கட்சி நடத்துகின்றனர். நாங்கள் ஒரு கட்சி நடத்துகிறோம். இருந்தாலும், முக்கியமான கொள்கை அடிப்படையில் ஒன்றாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜகவின் 'உளவாளி' மம்தா - காங்கிரஸ் தலைவர் கடும் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.