கோவை: ஒவ்வொரு செப்டம்பர் மாதந்தோறும், தேசிய ஊட்டச்சத்து மாத விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுவதன் ஒருபகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இந்தப் பேரணியை இன்று (செப்.2) மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைக்க, சுமார் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துகொண்டனர். பேரணியில் ஊட்டச்சத்து மாத விழாவைக்குறித்தும்; சத்தான உணவுகள் குறித்தும் பதாகைகள் ஏந்தியபடி பேரணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் கும்மியாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவிகள் கொண்டாடிய 'Children of Heaven'!