கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் வால்பாறை அடுத்த கல்லார் குடி பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் தங்களுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, சமீபத்தில் அவர்களுக்கு வனப்பகுதியில் வீட்டு மனை ஒதுக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் மூங்கில் மற்றும் தென்னங்கீற்று களைக் கொண்டு மலைவாழ் மக்கள் குடிசைகளை அமைத்தனர்.
வலுக்கட்டாயமாக மக்களை வெளியேற்றிய வனத்துறையினர்
இந்நிலையில் இன்று (டிச.3) காலை அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் எவ்வித முன்னறிவிப்புமின்றி மலைவாழ் மக்கள் அமைத்திருந்த குடிசைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அதிர்ச்சியுற்ற மலைவாழ் மக்கள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத வனத்துறையினர் வலுக்கட்டாயமாக அப்பகுதியிலிருந்து மக்கள் மக்களை வெளியேற்றி அப்புறப்படுத்தினர்.
அதே இடத்தில் குடிசைகளை ஏற்படுத்தித் தரவேண்டும்

இந்நிலையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அத்துமீறி நடந்துகொண்ட வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அப்புறப்படுத்திய குடிசைக்கு மாற்று ஏற்பாடாக மீண்டும் அதே இடத்தில் குடிசைகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சம்பவம் காரணமாக நாளை (டிச.4) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நீர் தேங்குகிறது என்ற பேச்சுக்கே இடமளிக்கக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு