கோயம்புத்தூர்: கோவை சித்தாதூர் ஹரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (30). தனது தாயாருடன் வசித்து வந்தார். இவர்கள், 40 வருடங்களுக்கும் மேலாக பழுதடைந்த ஓட்டு வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
கோவையில் கடந்த 6ஆம் தேதியன்று பெய்த கனமழையினால் பழுதடைந்த கட்டடங்களில் வசிக்கும் மக்களை அங்கு தங்க வேண்டாம் என்றும், அவர்கள் தங்க மாற்று இடங்களை அரசு அலுவலர்கள் ஏற்பாடுகள் செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அப்போது மழை நின்றுவிட்ட காரணத்தினால் அரசு ஏற்பாடு செய்த இடத்திற்கு யாரும் செல்லவில்லை. இந்நிலையில், நேற்று (ஜனவரி 8) இரவு 11 மணியளவில் ராஜசேகரின் வீடு இடிந்து விழுந்திருக்கிறது. இதில் ராஜசேகர் உயிரிழந்தார். அவரது தாயார் சரஸ்வதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அசால்ட்டாக செயினை பறிக்கும் அடையாளம் தெரியாத நபர்கள்: சிசிடிவி வெளியீடு!