கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் நகராட்சி மாதாந்திர கூட்டம், நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நேற்று (ஆக.30) நடைபெற்றது. இதில், அதிமுக சார்பில் மூன்று பேர் இருந்தும் கவுன்சிலர், ஜேம்ஸ் ராஜா மட்டும் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில், 41 தீர்மானங்களில் 16 தீர்மானங்களுக்கு அதிமுக கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜா எதிர்ப்பு தெரிவித்தார். பின் திமுக கவுன்சிலர்கள் தங்களது வார்டில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி தலைவரிடம் தெரிவித்தனர். இதுபின்னர், நகராட்சி தலைவர் சியாமளா நவநீதன் கிருஷ்ணன் கூறுகையில்,"பொள்ளாச்சி நகராட்சி வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆரோக்கியமான கருத்துக்களை அனைவரும் தெரிவிக்கலாம்.
நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஐந்து மாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில், கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை கடிதங்கள் வாயிலாக தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும், திமுக கவுன்சிலர்கள் நகராட்சி தலைவரிடம் ஒருவருக்கொருவர் முகம் சுளிக்கும் வண்ணம் தலைவரிடம் கேள்வி கேட்பது நகராட்சி அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது. இந்தக் கூட்டத்தில் நகராட்சி துணைத் தலைவர் கௌதமன் மற்றும் நகராட்சி ஆணையாளர் தாணு மூர்த்தி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையிலிருந்து 350 சிறப்புப்பேருந்துகள் இயக்கம்