கோயம்புத்தூர்: கோவை சரவணம்பட்டியைச்சேர்ந்த மாணவர் ஒருவர் காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவனுக்கு கஞ்சா பழக்கம் இருந்ததாக கூறப்படுகிது. இந்நிலையில் நேற்று(ஆகஸ்ட் 16) கஞ்சா போதையில் பள்ளி அருகே உள்ள நூலகம் முன்பு படுத்திருந்துள்ளார்.
இதனைக்கண்ட மாணவனின் நண்பர்கள் சிலர் எழுந்து வீட்டுக்குச் செல்லுமாறு கூறி உள்ளனர். இதனால் போதையில் இருந்த மாணவனுக்கும், சக நண்பர்களுக்கும் ஏற்பட்ட பிரச்னையின்போது நண்பர்கள் சிலர் கைகளாலும் மண்வெட்டி பிடியாலும் தாக்கியதில் போதையில் இருந்த மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
பின்னர் மாணவனின் உடல் உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் தாக்குதல் நடத்திய மாணவனின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஓமன் நாட்டில் சிக்கித்தவிக்கிறேன் என குமரி இளைஞர் வேதனை பொங்க வெளியிட்ட வீடியோ