கோயம்புத்தூர்: ஆனைக்கட்டி அடுத்த கேரளப்பகுதியான அட்டப்பாடி, அகலி, பசுமை பள்ளத்தாக்குப் பகுதியில் காட்டு யானைகள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றன. இந்த யானைகள் உணவிற்காகவும் வலசை செல்லவும் தமிழ்நாடு - கேரள வனப்பகுதிக்குள் மாறி மாறி வருவது வழக்கம்.
இந்நிலையில், அட்டப்பாடியில் உள்ள மலைப்பகுதி வழியாக யானைக்கூட்டம் ஒன்று நேற்று(செப்.18) இரவு வந்துள்ளது. அப்போது மலையின் விளிம்பில் யானைக்கூட்டம் சென்றபோது கால் தவறி பெண் யானை ஒன்று, மலை பாதை பள்ளத்தில் விழுந்தது. இதனால் யானை சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது.
இதனால், போக்குவரத்துப் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அட்டப்பாடி வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். தொடர்ந்து, இன்று(செப்.19) காலை அங்கு சென்ற வனத்துறையினர், யானையின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மேலும், வேறு ஏதாவது யானை இதைப்போன்று தவறி விழுந்து உள்ளதா எனவும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மலைப்பாதையில் யானை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திம்பம் மலைப்பாதையில் லாரி மீது மோதிய சரக்கு வாகனம் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது