ETV Bharat / city

கோழிக்கறி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: தந்தை புகார்!

author img

By

Published : Jul 31, 2020, 5:16 PM IST

கோவை: கோழிக்கறி துண்டு சாப்பிட்டு நான்கு வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சிறுவனின் தந்தை புகார் அளித்துள்ளார்.

A Child Dead By Eating Chicken In Coimbatore

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மனைவி பிங்கி(வட மாநிலத்தவர்). தற்போது பிங்கி குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து லிங்கேஷ் என்பவருடன் வசித்து வருகிறார்.

பிங்கிக்கு கபிலேஷ் என்ற 4 வயதில் மகன் ஒருவன் உள்ளான். இந்நிலையில், நேற்றிரவு (ஜூலை30) லிங்கேஷ், பிங்கி, மகன் கபிலேஷ் ஆகியோர் சிக்கன் உண்டுள்ளனர். அப்போது கோழிக்கறி எலும்பு துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் தவித்துள்ளான். அவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால், மருத்துவமனையில் சிறுவன் மருத்துவமனைக்கு வரும் முன்னே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்து விட்டனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த சிறுவனின் தந்தை காமாட்சி சிறுவனின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதென்றும் பிங்கி தான் சிறுவனை கொலை செய்திருக்க கூடும் என்றும், வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் சிறுவனின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.