சென்னை: ‘‘தேர்தல் 2024 : மீளும் ‘மக்கள்’ ஆட்சி’’ நூல் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகர் சர்பிடி தியாகராயர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர்," இந்தியா இந்தியாவாக அமைய இந்தியா கூட்டணி செயல்பட்டு வருகிறது. இந்த புத்தகத்தை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். நானும் ஒரு பதிப்பாளர் , முரசொலியில் பாசறை என்ற பதிப்புகளில் பதிப்பாளராகவும் உள்ளேன். தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி என 22 நாட்கள் 9 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து 125 பிரச்சார கூட்டங்கள் மக்களை சந்தித்து வாக்கு கேட்டுள்ளேன்.
360 டிகிரி அலசிய முதலமைச்சர்: மதவாதம் மீது மக்களுக்கு இருந்த கோபத்தை பார்த்தேன். பாஜகவின் வெறுப்பு பிரச்சாரம், மாபெரும் மக்களின் கோபத்தை பிரச்சார களத்தில் நான் உணர்ந்தேன். அந்த அடிப்படையில் தான் 2024 தேர்தல் முடிவுகள் வந்துள்ளது. அவற்றை இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் தெளிவாக விளக்கி இருக்கிறார்கள். முதலமைச்சர் கட்டுரை புத்தகத்தின் முதல் கட்டுரையில், பாஜக 10 வருடம் பாசிச போக்கை எடுத்துரைத்துள்ளார். இந்தியா கூட்டணியும், மக்களும் கடிவாளம் போட்டுள்ளார் என்பதை முதலமைச்சர் 360 டிகிரி அலசி இருக்கிறார்.
பாசிஸ்ட்டுகளுக்குக் கடிவாளமிட்ட 2024 நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி, ‘‘தேர்தல் 2024 : மீளும் ‘மக்கள்’ ஆட்சி’’ என்கிற புத்தகத்தை சென்னை தியாகராய நகரில் இன்று வெளியிட்டோம்.
— Udhay (@Udhaystalin) September 20, 2024
இப்புத்தகத்தில், ‘இந்தியாவுக்கு வழிகாட்டிய தமிழ்நாடு’ என்ற தலைப்பில் முதல் கட்டுரையை மாண்புமிகு… pic.twitter.com/v3qm2Ty9OY
இதையும் படிங்க: உதயநிதி தொடர்பான கேள்வி.. கோபமாக பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த்.. சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?
3 வது அணி கரை சேராது: தேர்தல் முடிவுக்குப் பிறகு பிரதமர் மோடி அவர்களின் நடைமுறை மாறியுள்ளது. ஆனால், பாசிச சிந்தனைகள் மாறவில்லை, நம்மால் மாற்றவும் முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை கொண்டு வருவதில் முனைப்பாக இருக்கிறார். இந்த தேர்தல் சரியான பாடம் புகட்டியுள்ளது. மூன்றாவது அணி என்றும் கரை சேராது என முதலமைச்சர் தெளிவான முடிவு எடுத்துள்ளார்.
‘உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகிறார் நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்’ என்று யூடியூப்பில் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். படபிடிப்புக்கு செல்பவரை வழிமறித்து கேள்வி கேட்டுள்ளனர். அவர் அரசியல் கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார். இப்போது நான் பேசுவதையும் உதயநிதி சூப்பர் ஸ்டாருக்கு பதிலடி என்று பத்திரிக்கையாளர்கள் கூறுவார்கள். நானே தலைப்பு தருகிறேன்” என்றார்.
அதிமுக மீண்டு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசை. பிரதமர் மோடி பிம்பத்தை இனி பீகார் மக்களும் நம்ப மாட்டார்கள். ஒரு பிரதமர் இஸ்லாமியர்களை தாக்கி பேசியது தேர்தலில் தோல்யடைய செய்தது. தமிழ்நாட்டுக்கு மட்டுமே தெரிந்த உதயநிதியை இந்திய அளவில் கொண்டு சேர்த்த பெருமை மோடி அவர்களையே சாரும். தமிழகத்தில் பாஜக வெற்றியடையாதது மக்களின் கோபத்தை காண்பிக்கிறது” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.