தமிழ்நாடு முழுவதும் 'இயேசு அழைக்கிறார்' அறக்கட்டளை, காருண்யா பல்கலைக்கழக நிறுவனர் பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், ஜெபக்கூடங்கள், பல்கலைக்கழகம், உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் 250க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயம்பத்தூரிலும் காருண்யா பல்கலைக்கழகம் அருகில் உள்ள ஜெப மண்டபம், பல்கலைக்கழகத்திற்குள் உள்ள அவரது வீடு, அலுவலகம், லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள காருண்யா கிறிஸ்தவ பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நடந்து வருகிறது.
நேற்று முன் தினம் அதிகாலையில் தொடங்கிய சோதனையானது, மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று பல்கலைக்கழகத்தை சுற்றிலும் காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டது. வருமான வரித்துறை சோதனையானது இரண்டு நாட்களில் முடிய கூடும் என்று கூறப்பட்ட நிலையில் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
இதையும் படிங்க:இயேசு அழைக்கிறார் டிரஸ்டிற்கு வந்த வெளிநாட்டு முதலீடுகள்!