வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவுக்குள் பூகம்பம் வெடிக்குமோ என்று கவலையில் இருந்த அக்கட்சி தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்கின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தருமபுரி, கோயம்புத்தூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். கரூரில் அதிமுகவைச் சேர்ந்த தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அதிமுகவில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டாலும், மூத்த தலைவர்களின் பெயர்கள் இடம்பெயரவில்லை என்ற குற்றச்சாட்டு அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக முதலமைச்சர் வேட்பாளர்: ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சேஃப் மூவ்?