ETV Bharat / city

கோவையில் இன்று 189 பேருக்கு கரோனா!

கோவை: மாவட்டத்தில் இன்று (ஜூலை 24) 189 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2966ஆக அதிகரித்துள்ளது.

189 more positive cases reported in Coimbatore total tally rises upto 2996

author img

By

Published : Jul 24, 2020, 10:18 PM IST

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் புதிதாக 6785 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று 189 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2966ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் இத்தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த 180 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1659ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இப்பெருந்தொற்றால் இன்று 59 வயதுடைய ஆண், 52 வயதுடைய ஆண், 70 வயது முதியவர், 61 வயது முதியவர் ஆகிய நான்கு பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் கோவையில் இறப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.