பொள்ளாச்சி அருகே உள்ள மருத்துவர் மயில்சாமி என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் 12 அடி மலைப்பாம்பு உள்ளதாக வனத் துறைக்கு தோட்டத்து ஊழியர்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ரேஞ்சர் காசிலிங்கம் தலைமையில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அங்கு சென்று 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்தனர்.
இது குறித்து ரேஞ்சர் காசிலிங்கம் கூறுகையில், "தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் தாங்காமல் மலைப்பாம்புகள் நீர் நிலைகளில் உள்ள தோட்டங்களில் உணவு தேடிவருவது வழக்கம். இதுபோல் ஏதேனும் பாம்புகளை பொதுமக்கள் அவர்கள் வயலிலோ, தோட்டத்திலோ கண்டால் வனத் துறைக்கு காலம் தாழ்த்தாமல் தகவல் தர வேண்டும். பிடிபட்ட மலைப்பாம்பை நவமலை அடர் வனப்பகுதியில் விடப்படும்" எனக் கூறினார்.