சென்னை: திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் நெப்போலியன்(26). இவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (ஏப். 10) காலை சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே அவரது உடல் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நெப்போலியன் Travel Vlog என்னும் யூடியூப் சேனல் வைத்திருந்தார். இந்தியாவின் பல்வேறு பிரசித்திபெற்ற இடங்களுக்குச் சென்று வீடியோ எடுத்து தனது யூடியூபில் பதிவேற்றம் செய்துவந்தார். இந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நடுரோட்டில் தாய், தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்... கேரளாவில் பயங்கரம்...'