சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் ஜூன் 14ஆம் தேதி காதல் பிரச்னை காரணமாக தேன்மொழி (25) என்ற இளம் பெண்ணை சரமாரியாக வெட்டிவிட்டு சுரேந்தர் என்ற வாலிபர் தப்பிக்க முயன்றார். அப்போது ரயிலில் அடிப்பட்ட அந்த வாலிபருக்கு தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த தேன்மொழி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், ரயிலில் அடிப்பட்ட சுரேந்தர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஆறு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சுரேந்தர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூராய்வுக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனை அமரர் அறையில் வைக்கப்பட்டுள்ளது.