தமிழ்நாட்டில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடந்து முடிந்தது. இத்தேர்தலில் 71 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த தொகுதிக்கு ஒதுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
அந்தவகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வாக்கு இயந்திரங்கள் உள்ள கட்டடத்தை இரண்டு இளைஞர்கள் கைப்பேசியில் படம் எடுத்தனர். இதனைக்கண்ட காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், இரண்டு பேரும் சூடான் நாட்டைச் சேர்ந்த காரி முகமது, அப்துல் ரகுமான் என்பது தெரியவந்தது.
மேலும், இருவரும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவருவதும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.