கரோனா தீநுண்மி தாக்கத்தின் காரணமாக நாடே ஊரடங்கில் முடங்கிக் கிடக்கிறது. இதன் காரணமாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும், தங்களது தொழில்களைத் தொடர்ந்து நடத்த முடியாமலும் தவித்துவருகின்றனர். ஆதரவற்றோர், சாலையோரத்தில் வசிப்போர் உண்ண உணவு இல்லாமல் திண்டாடுகின்றனர்.
இவர்களுக்கு மாநகராட்சி சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் அவ்வப்போது உணவு வழங்கப்பட்டுவந்தாலும், அது தொடரவில்லை.
இந்நிலையில், தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியைச் சேர்ந்த 40 இளைஞர்கள் இணைந்து, தங்களது சொந்த செலவில் தாங்களே உணவைத் தயாரித்து, நாள்தோறும் சாலையோரம் வசிக்கும் 400 பேருக்கு மதிய உணவை வழங்கிவருகின்றனர்.
தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து உணவுகளை வழங்கிவரும் இந்த இளைஞர்கள், இம்மக்களுக்கு கடந்த 30 நாள்களாக உணவு வழங்கிவருகின்றனர்.
மேலும், "ஊரடங்கு முடியும்வரை தங்களால் முடிந்தளவு உணவைத் தயாரித்து சாலைவாழ் மக்களுக்குத் தருவோம்" என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 'இல்லை என்ற சொல் வரும் வரை, உதவி செய்து கொண்டே இருப்பேன்'