ETV Bharat / city

'சொடக்கு மேல சொடக்கு போடுது' - ரயில் நிலையத்தில் இளம்பெண் குத்தாட்டம்

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்த பெண்ணிடம் அபராதம் கேட்ட அலுவலர்களை பார்த்து ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலை பாடி இளம்பெண் நடனமாடியுள்ளார்.

ரயில் நிலையத்தில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்

author img

By

Published : Aug 27, 2021, 3:58 PM IST

Updated : Aug 27, 2021, 6:59 PM IST

சென்னை: கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து, அதனை கடைபிடிக்கக்கோரி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் காவல் துறையினர், அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நின்றிருந்த இளம்பெண் ஒருவர், முகக்கவசம் அணியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

பெண்ணிடம் விசாரணை

அப்போது, ரயில் நிலைய நடைமேடையில் பணியில் இருந்த பயண சீட்டு பரிசோதகர், முகக்கவசம் அணியாமல் நின்றிருந்த பெண்ணுக்கு அபராதம் விதித்தார்.

அதற்கு அந்த இளம்பெண் டிக்கெட் பரிசோதகருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் நடைமேடையில் பாதுகாப்பு பணிக்காக இருந்த பெண் ஆர்.பி.எப் வீரர்கள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.

டான்ஸ் ஆடிய பெண்

பின்னர், தனது கையில் வைத்திருந்த முகக்கவசத்தை அணிந்துகொண்டு, திடீரென நடனமாட தொடங்கினார். மேலும், ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலையும் பாடிக்கொண்டே ஆடினார்.

இதனைக் கண்ட ரயில் பயணிகள் அங்கு குழுமத் தொடங்கினர். பின்னர், அப்பெண்ணிடம் முகக்கவசம் அணியாமல் இருந்ததற்கான அபராதம் வசூலிக்கப்பட்டது.

ரயில் நிலையத்தில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்

அபராதத் தொகையை கொடுத்ததால் அப்பெண்ணின் மீது காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: கீழடியில் பிரபல நாட்டியக் கலைஞர் நடனம் - காணொலி வைரல்!

Last Updated : Aug 27, 2021, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.