புதுச்சேரி மாநிலம், வெங்கடசுப்பையர் சிலை அருகே தனியார் மால் ஒன்று உள்ளது. அங்கு எதிர்ப்புற சாலையில் திடீரென நல்ல பாம்பு ஒன்று சாலையைக் கடக்க முற்பட்டது. பின்னர் அந்தப் பாம்பு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, சாலையில் வந்தவர் நிறுத்திய இருசக்கர வாகனத்தில் ஏறியது.
இதையடுத்து, வாகனத்தில் இருந்து பாம்பை அகற்ற முடியாமல் அதன் உரிமையாளர் திகைத்தார். உடனே அங்கிருந்த மக்கள் ஒன்றுகூடி, அதை வேடிக்கைப் பார்த்தனர். இதைத் தொடர்ந்து, அந்த இளைஞர் பதற்றத்தோடு பாம்புடன் இருசக்கர வாகனத்தில் அருகிலுள்ள வனத் துறை அலுவலகத்திற்குச் சென்றார்.
வனத் துறையினர் வர தாமதமானதால் கூட்டத்திலிருந்த மெக்கானிக் ஒருவர் தனது வாகனத்தில் இருந்த ஆயுதங்கள் கொண்டு இருசக்கர வாகனத்தின் பாகங்களை அகற்றினார். அப்போது, அங்கு வந்த வனத் துறையினர் பாம்பை லாவகமாகப் பிடித்து வெளியே எடுத்தனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கடைக்குள் புகுந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு