ETV Bharat / city

அமைதிப்பூங்காவாக தமிழகம் தொடர அதிமுகவுக்கு வாக்களிப்பீர் - முதலமைச்சர்

சென்னை: அமைதிப் பூங்காவான தமிழகம் இதே நிலையில் தொடர அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

eps
eps
author img

By

Published : Mar 31, 2021, 9:06 PM IST

Updated : Mar 31, 2021, 9:21 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தாம்பரம் உள்ளிட்ட எட்டு இடங்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, “திமுக என்றால் ரவுடி, அராஜக, கட்டப்பஞ்சாயத்து கட்சி. எனவே, அமைதி பூங்காவாகவும், மின் மிகை மாநிலமாகவும் சிறந்து விளங்கும் தமிழ்நாடு இதுபோலவே தொடர வேண்டும் என்றால் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு மீண்டும் வந்தால், ஏழை மக்களுக்கு காங்கிரீட் அடுக்கு மாடி வீடு கட்டித் தரப்படும். குடும்பத்திற்கு 6 விலையில்லா சிலிண்டர் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். புதிதாக ஆட்டோ வாங்குவோருக்கு 25,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும். நடைபாதை வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். இது போன்ற பல மக்கள் நலன் சார்ந்த உறுதிமொழிகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை அனேக மக்கள் வரவேற்றுள்ளனா்” எனத் தெரிவித்தார்.

அமைதிப்பூங்காவாக தமிழகம் தொடர அதிமுகவுக்கு வாக்களிப்பீர் - முதலமைச்சர்

இதையும் படிங்க: பாஜகவினர் வாகனப்பேரணியால் கோவையில் பதற்றம்

Last Updated : Mar 31, 2021, 9:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.