ETV Bharat / city

2020 - தமிழ்நாடு ஒரு பார்வை - தமிழ்நாட்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் ஒரு தொகுப்பை காணலாம்

கடந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் ஒரு தொகுப்பை காணலாம்.

2020 - தமிழ்நாடு ஒரு பார்வை
year end package tamilnadu
author img

By

Published : Jan 1, 2021, 7:33 AM IST

1. தந்தை பெரியார் குறித்த ரஜினிகாந்த் கருத்தால் சர்ச்சை

துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில், ராமரின் படத்தை பெரியார் செருப்பால் அடித்ததாக ரஜினிகாந்த் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்தப் பேச்சிற்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

குறிப்பாக, திராவிடர் கழகம் ரஜினிகாந்தின் கருத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

தந்தை பெரியார் குறித்த ரஜினிகாந்த் கருத்தால் சர்ச்சை !

2. "தென்னாடுடைய சிவனே போற்றி" கோபுரமேறியது தமிழ்

கோயில் குடமுழுக்குகளில் சமஸ்கிருதத்தில் மட்டுமே மந்திரம் சொல்லப்பட்டு வந்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின், ஆயிரம் ஆண்டுகள் கழித்த, இந்தாண்டு தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு விழாவில், தமிழில் வழிபாடு நடத்தப்பட்டது.

"தென்னாடுடைய சிவனே போற்றி" கோபுரமேறியது தமிழ்!

3. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களில் தலா ஐந்து வட்டாரங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும், 'தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டல மேம்பாட்டுச் சட்டத்தை' அதிமுக அரசு நிறைவேற்றி, அதை அரசிதழில் அரசாணையாக வெளியிட்டது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா!

4. நெட்டிசன்களின் எதிர்ப்பு - பணிந்த பாஜக

வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் புகைப்படத்தைக் கேலி செய்யும் விதமாக 'ஷேவிங் செட்' அனுப்பப்படுமென தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்தொன்று வெளியிடப்பட்டிருந்தது.

அந்தப் பதிவிற்கு சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக, நெட்டிசன்களுக்குப் பணிந்த பாஜக அந்தப் பதிவை நீக்கியது.

5. பழங்குடி சிறுவனை செருப்பைக் கழற்ற வைத்த அமைச்சர்

நீலகிரி மாவட்டம், முதுமலை - தெப்பகாடு யானைகள் முகாமிற்குச் சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கு பழங்குடி சிறுவனை அழைத்து, தன் செருப்புகளை கழற்ற வைத்தார். அமைச்சரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியிருந்தது.

இதுதொடர்பாக, அந்தச் சிறுவன் அளித்தப் புகாருக்கு, இதுவரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6. பதவியைப் பறித்த இஸ்லாமிய பயங்கரவாத சர்ச்சை

இஸ்லாமிய பயங்கரவாதம் தான் இந்து பயங்கரவாதத்தைத் தூண்டுகிறது என, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அந்த சர்ச்சையின் சிக்கலை சமாளிக்க அதிமுக தலைமை, அப்போது அவரிடமிருந்து விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தது.

7. 'மந்திரத்தை ஒலிக்க விடுங்க... கரோனா ஓடிவிடும்' - எஸ்.வி. சேகர்

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று நோய்ப் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள "அதர்வண வேதத்தில் உள்ள 'கிருமி சம்ஹார சூக்தம்' என்னும் மந்திரத்தை அவசியம் கேளுங்கள்'' என, பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். உலக நாடுகளின் சுகாதாரத் துறையினர் அறிவியல் பார்வையோடு தடுப்பு மருந்துக்கு பிரதான கவனம் செலுத்தி வந்த காலத்தில், 'சிப்' புகழ் எஸ்.வி.சேகரின் இந்த கருத்து பல கலாய்களைக் குவித்தது.

8. ஓய்வுபெறும் வயது 59ஆக உயர்த்தப்பட்டது

நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59ஆக உயர்த்த விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

9. தமிழ்நாட்டின் புவிசார் குறியீடுப் பொருள்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்தது

தனித்தன்மை வாய்ந்த பொருள்களுக்கு வழங்கப்படும் புவிசார் குறியீடு அங்கீகாரம், இந்தாண்டு தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மர வேலைப்பாடு ஆகிய இரண்டு பொருள்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கிவரும் புவிசார் குறியீடு பதிவகம், இதுவரை உலகளவில் தனித்தன்மை வாய்ந்த 35 தமிழ்நாட்டுப் பொருள்களுக்கு வழங்கியுள்ளது. தற்போது அந்த எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.

10. பெயர் மாற்ற அறிவிப்பைத் திரும்பப் பெற்ற அதிமுக அரசு

தமிழ்நாட்டில் உள்ள 1,018 நகரங்கள், சிறுநகரங்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பு போலவே ஆங்கிலத்திலும் எழுத வேண்டுமென தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த முடிவிற்கு, மொழியறிஞர்கள், வல்லுநர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்ததனர்.

இதனையடுத்து, அந்த அறிவிப்பை அரசு திரும்பப் பெற்றது.

11. சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்: உலகளவில் வெடித்த போராட்டம்

விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜும், அவரது மகன் பென்னிக்ஸும் போலீஸ் கஸ்டடியில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தது உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இருவரின் படுகொலைக்கு நீதி கேட்டு, இந்தியா மட்டுமல்லாது உலகளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்: உலகளவில் வெடித்த போராட்டம்!

12. தேசிய விருது பெற்ற 'குடிமராமத்து' திட்டம்

நாடு முழுவதும் நீர்வளப் பாதுகாப்பு, மேலாண்மைத் துறைகளில் சிறப்பாக செயல்படும் மாநிலம், மாவட்டம், உள்ளாட்சி அமைப்புகள் எனப் பல பிரிவுகளில், 'தேசிய நீர் விருதுகள்' 2018ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2019ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் விருதுகளில் முதலிடத்தை 'குடிமராமத்து' திட்டத்தை முன்னெடுத்த தமிழ்நாடு அரசு வென்றது.

13. அரசு கல்வித் தொலைக்காட்சி தொடக்கம்

ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தலுக்கான தேவையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு கல்வித் தொலைக்காட்சி எனும் புதிய தொலைக்காட்சியைத் தொடங்கியது.

அரசு கல்வித் தொலைக்காட்சி தொடக்கம்!
அரசு கல்வித் தொலைக்காட்சி தொடக்கம்!

14. ஹிந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?

சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி கனிமொழியைப் பார்த்து, "ஹிந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?" என சி.ஐ.எஸ்.எஃப். பெண் காவலர் கேள்வி கேட்ட நிகழ்வால் தமிழ்நாட்டில் மீண்டும் ஹிந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான குரல் ஆகஸ்ட் 9ஆம் தேதி எழுந்தது.

இதனையடுத்து, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை தமது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு விளக்கம் தெரிவித்திருக்கிறது. அதில், இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மொழியை மட்டும் பேச வலியுறுத்துவது என்பது சி.ஐ.எஸ்.எஃப். கொள்கையும் அல்ல என விளக்கம் அளித்திருந்தது.

ஹிந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?
ஹிந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?

15. புதிய அண்ணா பல்கலைக்கழகம்

கடந்த 2019ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு சீர்மிகு பல்கலைக்கழகம் என்கிற சிறப்பு தகுதி வழங்குவதாக அறிவித்தது. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா சீர்மிகு பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் என இரண்டாகப் பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.

ஆனால், சீர்மிகு பல்கலைக்கழகம் எனும் சிறப்புத் தகுதி வழங்கப்பட்டால் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், மத்திய அரசின் சிறப்புத் தகுதி வழங்குவதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.

அத்துடன், அண்ணா பல்கலைக்கழகச் சட்டம் 1978ஐை திருத்தி புதிய மசோதாவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. அதன்படி, சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகங்களும், 'அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்' என்ற பெயரில் ஒருமை வகை பல்கலைக்கழகமாக மாற்றியமைக்கப்படும் என்றும்; அதே நேரத்தில் 'அண்ணா பல்கலைக்கழகம்' என்ற பெயரில் புதிய இணை வகை பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவிற்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

16. 'ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டத்தில் இணைந்த தமிழ்நாடு

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதிமுக கடுமையாக எதிர்த்த 'ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டத்தில் தமிழ்நாடு இணைவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

17. உலகளவில் ட்ரெண்டான 'ஹிந்தி தெரியாது போடா' டி- ஷர்ட்

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ், இயங்கி இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ஏ.எஸ்.ஐ) உள்ளிட்ட துறைகள் மூலமாக மறைமுகமாக ஹிந்தி திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. இந்த திணிப்பினை எதிர்க்கும் வகையில், 'ஹிந்தி தெரியாது போடா' என அச்சிடப்பட்ட டி-ஷர்ட்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல், உலகளவில் ட்ரெண்டானது.

இளைஞர்களின் இந்த முன்னெடுப்பிற்கு மொழி ஆர்வலர்கள், தமிழின உணர்வாளர்கள், திராவிட இயக்கத்தினர் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை நல்கினர்.

உலகளவில் ட்ரெண்டான 'ஹிந்தி தெரியாது போடா'  டி- ஷர்ட்

18. திமுக தலைவருக்கு எதிராக 'மொட்டை' சுவரொட்டிகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அமைப்பின் பெயர், அச்சக முகவரி உள்ளிட்ட எந்தவொரு விவரங்களும் இல்லாமல் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சுவரொட்டிகளை ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

19. அரசியல் கட்சி தொடக்கம் : அப்பா மகன் இடையே வெடித்த மோதல்

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் ஆணையத்தில் 'அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்' என்ற பெயரில் கட்சிப் பதிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தி வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே நடிகர் விஜய், தன் தந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் தனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை என்றும்; கட்சியில் தனது பெயரையோ, படத்தையோ பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கை வெளியிட்டார். இதனால், ஊடகங்கள் மேலும் பரபரப்பானது.

20. பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததி ராயின் நூல்

பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அளித்தப் புகாரின் அடிப்படையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து 'வாக்கிங் வித் காம்ரேட்ஸ்' என்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் நூல் நீக்கப்பட்டது.

இதனை எதிர்த்துப் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள், எழுத்தாளர் இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, நடைபெற்ற பல்கலைக்கழகப் பாடத்திட்ட குழுக் கூட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய வாக்கிங் வித் காம்ரேட்ஸ் புத்தகம் குறித்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு விரைவில் எடுக்கப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததி ராயின் நூல்!

21. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அரசு தடை

தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டமான ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்யும் வகையில் அவசரச்சட்டம் (ordinance) கொண்டு வரப்பட்டது. இந்தத் தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் அளிக்கப்படும். அதேபோல, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் (Online gaming house) வைத்திருப்பவர்களுக்கு ரூ.10,000 அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அரசு தடை!

22. வன்னியர் சமுதாயத்திற்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக போராட்டம்

வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென கோரிக்கை முன்னிருத்தி பாமக, வன்னியர் சங்கம் சார்பில் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி, 4ஆம் தேதிவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.

23. பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் ரூ. 110 கோடி முறைகேடு

இரண்டு ஏக்கருக்கு குறைவான நிலங்களைக் கொண்ட சிறு, குறு, நடுத்தர விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் போலியான பெயர்களில் 110 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 34 அரசு அலுவலர்கள், கணிப்பொறி மேலாளர்கள் உள்ளிட்ட 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

24. பணி நியமனத்தில் ரூ. 200 கோடி ஊழல் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆணையம் அமைப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், இயங்கிவரும் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராக, ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பித்த 100க்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தனர். அது குறித்து விசாரணை மேற்கொள்ள நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பணி நியமனத்தில்  ரூ. 200 கோடி  ஊழல்  சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆணையம் அமைப்பு

25. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் 20% இட ஒதுக்கீடு

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் எனும் சட்டத் திருத்த மசோதாவுக்கு 8 மாதங்கள் கழித்து, டிசம்பர் 8ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இதன் மூலமாக பட்டப்படிப்பு மட்டுமின்றி 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

26. மாணவர்களின் வயிற்றில் பால் வார்த்த பழனி'சாமி'

கரோனா பரவல் காரணமாக, பள்ளி மாணவர்களின் நலன்கருதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்த முடியாத நிலையில் அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதேபோல, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தவிர, இதர ஆண்டு பாடங்களில் அரியர்ஸ் வைத்திருந்த அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி (பாஸ்) பெற்றதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், கல்வியாளர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர்.

27. திமுகவின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் காலமானார்

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் பொதுச்செயலாளராக இருந்தவருமான பேரா. க. அன்பழகன் உடல் நலக் குறைவால் மார்ச் 7ஆம் தேதி உயிரிழந்தார்.

பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என நான்கு தலைமுறைகளை கடந்த இவர் சமூக நீதி, திராவிட இயக்கம், இறை மறுப்புக் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.

திமுகவின் பொதுசெயலாளர் பேராசிரியர் அன்பழகன் காலமானார்!

28. தமிழ்நாடு பாஜகவில் புது பாய்ச்சல்

தேசிய பட்டியலின பழங்குடியின ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல். முருகன், தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக அக்கட்சியின் மேலிடம் மார்ச் 11ஆம் தேதி நியமித்தது. அதேபோல், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுவந்த முன்னாள் ஐ.பி.எஸ் அலுவலாரன அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். அவருக்கு அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிகழ்வும் அக்கட்சிக்கு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக வட்டாரங்கள் நம்புகின்றன.

29. ஜெ. அன்பழகன் : கரோனாவால் இறந்த முதல் மக்கள் பிரதிநிதி

உலகையே உலுக்கிய கரோனா தமிழ்நாட்டிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவிகளை வழங்கி வந்த சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் கோவிட்-19 தொற்று பாதிப்பால் ஜூன் 10ஆம் தேதி மரணமடைந்தார்.

இந்திய அளவில் தொற்றால் உயிரிழந்த முதல் மக்கள் பிரதிநிதி ஜெ. அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ. அன்பழகன்  : கரோனாவால் இறந்த முதல் மக்கள் பிரதிநிதி !

30. கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் சேனல் முடக்கம்

கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விளக்கம் அளித்து காணொளி வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் சேனலுக்கு எதிராக பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நாத்திகன் சுரேந்திரன் உள்ளிட்ட நால்வரை காவல் துறையினர் கைதுசெய்தனர். தொடர்ந்து கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை முடக்கப்பட்டது.

கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் சேனல் முடக்கம்!

31. தனிக்கொடியுடன் தமிழ்நாடு நாள் கொண்டாடியவர்கள் கைது

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தனிக்கொடியுடன் ‘தமிழ்நாடு நாள்’ விழா கொண்டாடிய தமிழ்த்தேசிய பேரியக்கம், தமிழர் தேசிய முன்னணி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது கவனிக்கத்தக்கது.

32. தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜக

நீதிமன்றத் தடை உத்தரவை மீறி, கரோனா ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் இந்துக் கடவுள்களைப் பழிப்போரைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை என்ற பெயரில் நவம்பர் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7ஆம் தேதிவரை பேரணி நடத்தப்பட்டது.

இந்த யாத்திரையின்போது நாள்தோறும் தடையை மீறி யாத்திரையை நடத்தியதற்காக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜக!
தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜக!

33. இந்திய - சீன மோதலில் தமிழ்நாட்டு வீரர் பழனி வீரமரணம்

இந்திய - சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்திற்கும், சீனா ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணம் அடைந்தார்.

தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜக!
தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜக!

34. திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் போட்டியின்றி தேர்வு

தமிழ்நாடு வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர். அதேபோல, திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக க. பொன்முடி, ஆ. ராசா ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டனர்.

35. 800 திரைப்படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி

இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘800’யில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக இருந்தது. சிங்கள பேரினவாத ஆதரவாளரான முத்தையா முரளிதரனின் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் குரல் எழுப்பினர்.

கடும் எதிர்ப்பின் காரணமாக அவர் அத்திரைப்படத்தில் இருந்து விலகினார்.

800 திரைப்படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி !

36. ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுப்படுத்தி பேசிய தயாநிதி மாறன்

திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் மே மாதம் 13ஆம் தேதி தலைமைச் செயலாளரைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எங்களுக்கு தலைமைச் செயலாளர் உரிய மரியாதை தரவில்லை.

நாங்கள் என்ன மூன்றாம் தர மக்களா, தாழ்த்தப்பட்ட மக்களா? ” எனக் கூறி ஆவேசமாகப் பேசினார். தயாநிதி மாறனின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குள்ளான நிலையில் அவர் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

37. சிறப்பு டிஜிபிக்கு மிரட்டல் விடுத்த உதயநிதி

தஞ்சாவூர் மாவட்டம் குத்தாலத்தில் காவல் துறை அனுமதியை மீறி கூட்டம் நடத்திய உதயநிதி கைது செய்யப்பட்டபோது, சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியின் பெயரைக் குறிப்பிட்டு, "அவருதான் ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ், பேரெல்லாம் ஞாபகம் வச்சிருப்போம்.

இன்னும் ஐந்து மாதங்கள்தான் இருக்கு. எங்களுக்குத் தெரியாத காவல் துறையா, நாங்க பார்க்காத காவல் துறையா..." என மிரட்டும் தொணியில் பேசியது சர்ச்சையானது.

38. மனு ஸ்மிருதி சர்ச்சை

காணொளி கருத்தரங்கம் ஒன்றில் மனு ஸ்மிருதியில் பெண்கள் குறித்து கூறப்பட்டுள்ள கருத்துகளை மேற்கோள்காட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., பேசிய கருத்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தொல்.திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

39. மனு ஸ்மிருதியை எரித்து போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

இந்துத்துவ அமைப்புகளின் பொய் பரப்புரைக்களுக்கு பதிலளிக்கும் வகையில் "மகளிர் எழுச்சி மக்கள் மீட்சி" எனும் பரப்புரை இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்டது. இப்பரப்புரை இயக்கத்தை சைவத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் கலையரசியம்மாள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் நடந்த இப்பரப்புரையில் முடிவில் 'பெண்களை இழிவுபடுத்தும் மனு ஸ்மிருதி நூலை தடை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி நடந்த போராட்டங்களில் மனு ஸ்மிருதி எரிக்கப்பட்டது.

மனுஸ்மிருதியை எரித்து போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி!

40. நிலத்தடி நீரை செறிவூட்டும் சரபங்கா நீரேற்றுத் திட்டம்

சேலம் மாவட்டத்தை அடுத்த மேட்டுப்பட்டி ஏரியில் ரூ.565 கோடி மதிப்பிலான மேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மார்ச் 4ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டத்தின் மூலம் சேலத்தின் எட்டு ஒன்றியங்களில் உள்ள 100 ஏரிகளுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டலும், நான்காயிரத்து 238 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியும் கிடைக்கும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

41. தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உதயம்

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் அறிவிக்கப்பட்டது.

42. பட்டியலின ஊராட்சித் தலைவர்களை தொடர்ந்து செயல்படவிடாமல் தடுக்கும் சாதிவெறியர்கள்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்துப்பாக்கம் அமிர்தம் அம்மாள், குருவராஜ கண்டிகை சி.ரவி, கோயம்புத்தூர் மாவட்டம் தேவராயபுரம் சுந்தரி, கடலூர் மாவட்டம் தெற்கு திட்டை ராஜேஸ்வரி, தேனி மாவட்டம் ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சித் தலைவர் பழனிச்சாமி, திருச்சி மாவட்டம் பெருகமணி கிருத்திகா அருண்குமார், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் நாகஜோதி, மதுரை மாவட்டம் மேலக்கால் முருகேஸ்வரி என, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதிய ரீதியாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

கிராம சபைகளை வழிநடத்தும் ஊராட்சி மன்றத் தலைவர்களை செயல்படவிடாமல் தடுக்கும் சாதி வெறியர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்கது.

43. தமிழ்நாட்டை அடுத்தடுத்து தாக்கிய இரு புயல்கள்

தமிழ்நாட்டை இதுவரை 30க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்கியுள்ளன. வரலாறு காணாத வகையில் இந்தாண்டு நிவர், புரெவி என இரண்டு புயல்கள் அடுத்தடுத்து தமிழ்நாட்டின் கடற்கரையோர மாவட்டங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின.

44. ‘என் காசு’

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தனியார் வணிக வங்கியான கரூர் வைஸ்யா வங்கி (கே.வி.பி) 'என் காசு' என்ற பெயரில் இந்தியாவின் முதல் ப்ரீபெய்ட் வாலட் அட்டையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது.

45. பள்ளர் உள்ளிட்ட 7 சமுதாயங்களை தேவேந்திர குல வேளாளர்களாக அழைக்க முதலமைச்சர் பரிந்துரை

பள்ளர், குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், வாதிரியான், தேவேந்திரக் குலத்தான் ஆகிய 7 சமுதாயங்களை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயரிட மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

46. அரசியல் தலைவர்கள் மரணம்

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான வசந்தகுமார் ஆகஸ்ட் 28ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு அக்டோபர் 31 ஆம் தேதி அன்று காலமானார்.

47. மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் சட்டப்போராட்டம் நடத்திவரும் பூர்ணசுந்தரி

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்றவர் பூரணசுந்தரி (25). பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவருக்கு ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய்ப் பணி) பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தனக்கு ஓ.பி.சி இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படி ஐ.ஏ.எஸ் பணியிடம் ஒதுக்கக் கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து தன் உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் பூர்ணசுந்தரி சட்டப்போராட்டம் நடத்திவருகிறார்.

48. ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் நல்லெண்ண தூதரான மதுரையின் மகள் நேத்ரா

கரோனா ஊரடங்கு நெருக்கடி காலக்கட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தன்னுடைய எதிர்கால சேமிப்பான ஐந்து லட்ச ரூபாயை செலவிட்ட 9 ஆம் வகுப்பு மாணவி நேத்ராவை மேம்பாடு மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் சங்கம், தனது நல்லெண்ண தூதராக அறிவித்து, டிக்ஸான் ஸ்காலர்ஷிப்பை (DIXON SCHOLARSHIP) வழங்கி கௌரவித்துள்ளது.

அதுமட்டுமன்றி, ஐ.நா அவையின் மாநாடுகளில் குடிமைச் சார்ந்து பேச மாணவி நேத்ரா அழைக்கப்பட்டிருக்கிறார்.

49. கட்சித் தொடங்கப்போவதில்லை - மன வலியுடன் அறிவித்த ரஜினி

கட்சித் தொடங்கவிருப்பதாக அறிவித்திருந்த நிலையில், டிசம்பர் 29 அன்று அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்தார். மிகுந்த மனவலியுடன் இதனை தான் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

கட்சித் தொடங்கப்போவதில்லை - மன வலியுடன் அறிவித்த ரஜினி !

50. கரோனா அச்சுறுத்தல் : பொது முடக்கமாகவே முடிந்த 2020

ஆண்டின் தொடக்கத்தில் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் மார்ச் மாதத்தில் உலகளவிய அச்சுறுத்தலாக மாறியது. கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கை பின்பற்றுமாறு பொது மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்தார்.

அப்போது தொடங்கிய மக்கள் ஊரடங்கு, பொது முடக்கமாகவே தளர்வுகளுடன் 2020ஆம் ஆண்டின் இறுதிவரை தொடர்ந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.