சென்னை சேலையூரில் ஜெயந்திலால் என்பவருக்குச் சொந்தமான ராஜேஸ்வரி மரக்கடையில் நேற்று (நவ.03) இரவு டிவி, கணினி உள்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளயடித்துச் சென்றனர்.
அத்துடன் சிசிடிவி கேமராக்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று (நவ.04) காலை கடையை திறக்க சென்றபோது கொள்ளைபோனதை அறிந்த உரிமையாளர், இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலுடன் சேர்ந்து பாட்டி வீட்டில் கொள்ளையடித்தப் பெண்!