சென்னை : கெருகம்பாக்கம்தை சேர்ந்த பெண் வழக்குரைஞர் ஒருவர் நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) மீது அளித்த புகாரின் பேரில் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீதித்துறை நடுவர் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரில், “நான் கணவரை பிரிந்து வாழ்கிறேன். எனக்கு சந்தானம் என்பவர் அறிமுகமானார். அவரும் மனைவியை பிரிந்தவர்.
நாங்கள் இருவரும் நெருங்கி பழகிவந்தோம். நீதித்துறை நடுவராக உயர்ந்த பின்னர் என்னை சந்தானம் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். இதை நம்பி நானும் அவரிடம் நெருங்கி பழகினேன். அப்போது என்னிடமிருந்து சிறுக சிறுக ரூ.10 லட்சம் வரை பெற்றார்.
தற்போது என்னை நிராகரித்துவருகிறார்” எனக் கூறியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் நீதித்துறை நடுவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க : பாலியல் புகார்: வழக்கறிஞருக்கு விசிக பிரமுகர் கொலை மிரட்டல்