ETV Bharat / city

வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக மோசடி - பெண் உட்பட இருவர் கைது!

சென்னை: வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, நூதன முறையில் மோசடி செய்து வந்த பெண் உட்பட இருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மோசடி செய்த பெண் உட்பட இருவர் கைது
மோசடி செய்த பெண் உட்பட இருவர் கைது
author img

By

Published : Dec 4, 2019, 7:21 PM IST

சென்னையில் ஒரு கும்பல் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, தங்களது கைப்பேசி எண்ணை விளம்பரப்படுத்தியுள்ளனர். அந்த விளம்பரத்தை நம்பி பேசிய சிலரிடம், ஆதார் கார்டு, ரேசன் கார்டு உள்ளிட்டவைகளை தங்களது மண்ணடி அலுவலகத்திற்குக் கொண்டு வரவும் என்றும் கூறியுள்ளனர்.

இதை நம்பி அங்கு சென்ற சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்துரு, பிரவீன்குமார், பாரிமுனையைச் சேர்ந்த பெளசியா பேகம் ஆகியோரிடம் ஆதார் கார்டு, ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்ற மீனா, சங்கர் உள்ளிட்ட சிலர், அவர்களது பெயரிலேயே கடன் பெற்று சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினி, கைப்பேசி, தொலைக்காட்சி போன்ற பொருட்களையும் வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஆவணங்கள் மூலம் பெற்ற பொருட்களுக்கு கடனைக் கட்ட வேண்டும் என்று வீட்டிற்கு ரசீது வந்தபோது தான் சந்துரு, பிரவீன் குமார், பெளசியா பேகத்துக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகாரளித்ததின் பேரில் காவல் துறையினர் மீனா, சங்கர் ஆகியோரைக் கைது செய்தனர். பின்னர் மீனா, சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த காவல்துறையினர் வேறு சில நபர்களையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

''காவலன் செயலி''யை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்: டிஜிபி !

Intro:Body:சென்னையில் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி நூதன முறையில் மோசடி செய்து வந்த பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் பொதுமக்கள் பலரிடம் ஒரு கும்பல் லோன் பெற்றுத் தருவதாக கூறி நூதன முறையில் மோசடி செய்வதாக சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அந்த கும்பல் கடன் தேவையா உடனே தொடர்பு கொள்ளவும் என தங்களது செல்போன் நம்பரை விளம்பரபடுத்தியுள்ளனர். அந்த விளம்பரத்தை நம்பி சிலர் அந்த செல்போனுக்கு பேசியுள்ளனர்.

அப்போது வங்கியில் கடன் பெற்று தருகிறோம் உங்களுடைய ஆதார் கார்டு, ரேசன் கார்டு உள்ளிட்டவைகளை தங்களது மண்ணடி அலுவலகத்திற்கு கொண்டு வரவும் என அவர்கள் கூறியுள்ளன்ர். இப்படி இதை நம்பி சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்துரு, பிரவின்குமார், பாரிமுனையைச் சேர்ந்த பெளசியா பேகம் ஆகியோரிடம் மீனா, நிசா,சங்கர் அவர்களிடம் இருக்கும் ஆதார் கார்டு,ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வாங்கிக் கொண்டு அவர்களது பெயரிலேயே சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான மடிக்கணி, விலையுயர்ந்த செல்போன், டிவி யை வாங்கியுள்ளனர். பின்னர் லோன் வாங்கித் தருவதாக கூறி தொடர்ந்து ஏமாற்றியும் வந்துள்ளனர். இந்நிலையில் ஆவணங்கள் மூலம் பெற்ற பொருட்களுக்கு கடனை கட்ட வேண்டும் என்று வீட்டிற்கு ரசீது வந்த உடன் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சந்துரு,பிரவீன் குமார்,பெளசியா ஆகியோரின் புகாரை அடுத்து சென்னை வடக்கு கடற்கரை போலீசார் மீனா மற்றும் அவரின் கூட்டாளி சங்கரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை செய்த்ததில் லோன் வாங்கி தருவதாக கூறி சென்னை மண்ணடியில் அலுவலகம் வாடகைக்கு எடுத்து இது போன்று பலரை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. வடக்கு கடற்கரை போலீசார் மீனா,சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மீனாவின் கணவர் மற்றும் மற்றொ உறவினரான நிசா என்பவ்ரையும் போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி செல்போன் நம்பரை விளம்பரப்படுத்தி நூதன மோசடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்யியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.