ETV Bharat / city

காவல் துறை ஆய்வாளர் மீது பெண் புகார் - complaint against police officials

எர்ணாவூர் காவல் நிலைய ஆய்வாளர் மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும், புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகக் கூறி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

காவல் துறை ஆய்வாளர் மீது பெண் புகார்
காவல் ஆணையர் அலுவலகம்
author img

By

Published : Jan 12, 2022, 10:15 AM IST

சென்னை: எர்ணாவூர், ஆல் இந்திய ரேடியோ நகரைச் சேர்ந்தவர் கதிர்வேல் (40). மாற்றுத் திறனாளியான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (37) பி.இ பட்டதாரி ஆவார்.

சரஸ்வதி, ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்புகாரில், தனது கணவரிடம், மலர்மணி என்பவர் உள்பட சிலர் மோசடி செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார்.

ஆனால், எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளரும், அங்கு பணிபுரியும் காவலர்களும் இப்புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். மேலும், தன்னையும் தன் குடும்பத்தினரையும் காவல் துறையினர் மரியாதைக்குறைவாக நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், மோசடி செய்த நபர்களுக்கு உடந்தையாகவும் காவல் துறையினர் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் சரஸ்வதி குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க: நரேந்திர மோடி திறக்கும் புதிய மருத்துவக் கல்லூரி - மகிழ்ச்சியில் திருவள்ளூர் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.