ETV Bharat / city

நடக்குமா அதிமுக-சசிகலா இணைப்பு? நடந்தால் திமுகவின் நிலை என்ன?

சென்னை: அதிமுக-சசிகலா இணைப்புக்கு வாய்ப்பே இல்லை என முதலமைச்சர் பழனிசாமி கூறிவரும் நிலையில், இவ்விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மவுனம் காத்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இணைந்தால் அது தேர்தலில் திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

sasikala
sasikala
author img

By

Published : Feb 11, 2021, 4:25 PM IST

Updated : Feb 11, 2021, 10:18 PM IST

'பொது எதிரியை வீழ்த்த ஒற்றுமையுடன் ஓரணியில் செயல்பட வேண்டும் என்பது தான் என் எண்ணம்' - தமிழகம் திரும்பிய சசிகலா இவ்வாறு தெரிவித்திருப்பது, அதிமுக - சசிகலா இணைப்புக்கு வாய்ப்புள்ளதா என்ற முதல் கேள்வி எழுவதுடன், அவ்வாறு இணைந்தால் அது திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற துணைக் கேள்வியையும் எழுப்புகிறது.

நான்காண்டு சிறை முடிந்து விடுதலையான சசிகலாவிற்கு, பெங்களூருவிலிருந்து சென்னை வரை சுமார் 23 மணி நேரம் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. ஆனால் அதுவல்ல இங்கு பிரச்சனை. வரவேற்பில் அதிமுக கொடிகளுடன் தொண்டர்களும் கலந்து கொண்டதுதான் பேசுபொருளாகியுள்ளது. அதிமுக கொடி பொருத்திய காரில், கருப்பு, வெள்ளை, சிவப்பு என அதிமுக துண்டும் அணிந்து வந்தார் சசிகலா. காரில் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என நோட்டீஸ் வழங்கியபின், அதிமுகவின் சூளகிரி ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் சம்பங்கியின், ’கொடி’ பறந்த காரில் பவனி வந்த சசிகலாவின் டிவிஸ்ட்டை அதிமுக தலைமையே எதிர்பார்க்கவில்லை.

அதிமுக கொடி பறக்கும் காரில் சசிகலா!
அதிமுக கொடி பறக்கும் காரில் சசிகலா!

வரும் வழியில் தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றிய சசிகலா, "அரசியல் எதிரிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இடம் தராமல், பொது எதிரியை வீழ்த்த ஒற்றுமையுடன் ஓர் அணியில் செயல்பட வேண்டும் என்பது தான் என் எண்ணம்" என்றார். சசிகலாவின் இந்த வார்த்தைகள் அதிமுக - சசிகலா (அமமுக) இணைய வாய்ப்புள்ளதோ என்ற எதிர்பார்ப்பை எழுப்பியது. ஆனால், சசிகலாவிற்கு வாகனம் கொடுத்து உதவிய, வரவேற்பு அளித்த அதிமுக நிர்வாகிகள் 7 பேரை அக்கட்சித் தலைமை நீக்கியது, இணைப்புக்கு வாய்ப்பில்லையோ என்றும் எண்ண வைத்தது.

சசிகலா சிறை சென்ற பின்னர், அதிமுகவிலிருந்து பிளவுபட்டு டி.டி.வி.தினகரன் தலைமையில் அமமுக என்ற புதிய கட்சி உருவானது. நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்த குக்கர் சின்னம் கிடைக்காததால், கிஃப்ட் பாக்ஸ் சின்னத்தில் போட்டியிட்டு 5.27% வாக்குகளும், அதோடு நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான பேரவை இடைத்தேர்தலில் 7% வாக்குகளும் பெற்றனர். தினகரன் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், தனி சின்னத்தில் போட்டியிட்டு சொல்லும்படியான வாக்கு சதவீதத்தை அமமுக பெற்றது.

சசிகலாவுக்கு இபிஸ் பகை; ஓபிஎஸ் உறவா?
சசிகலாவுக்கு இபிஸ் பகை; ஓபிஎஸ் உறவா?

குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுக தோல்வியடைய அமமுக பிரித்த வாக்குகளே முக்கிய காரணமாயிருந்தன. ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணி 3,41,304 வாக்குகளும், திமுக கூட்டணி 4,69,943 வாக்குகளும், அமமுக 1,41,195 வாக்குகளும் பெற்றன. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் ஐந்து லட்சத்து 229 ஆகும். அதிமுக கூட்டணி நான்கு லட்சத்து 97 ஆயிரத்து 10 வாக்குகள். அமமுக பெற்ற வாக்குகள் 62,219. இவற்றை கூட்டிக்கழித்து பார்த்தால் நிலைமை புரியும். இதே நிலைதான் இன்னும் சில தொகுதிகளிலும் இருந்தன.

அத்தேர்தலில், அதிமுக - அமமுக இணைந்திருந்தால் வெற்றிக்கு அதிக சாத்தியக்கூறுகள் இருந்ததை உறுதியாக கணிக்க முடியும். எனவேதான், சசிகலாவுடன் இணைவது அதிமுகவிற்கு பலமாகவே பார்க்கப்படுகிறது. சசிகலா, டி.டி.வி மற்றும் அதிமுக மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் சிலர், அதிமுக இணைப்பு குறித்து மறைமுகமாக பேசினாலும், முதலமைச்சர் பழனிசாமியோ அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார். அமைச்சர் ஜெயக்குமாரும் சசிகலா-முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு ஜென்மத்திலும் நடக்காது என்கிறார்.

சசிகலா-அதிமுக இணைப்பு விவகாரத்தில் மவுனம் காக்கும் ஓபிஎஸ்!

இதுகுறித்து இவர்கள் மட்டுமே பேசிக்கொண்டிருக்கையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் கப்சிப் மவுனம்தான், இணைவுக்கு இன்னும் வாய்ப்பிருப்பது குறித்து பேசவைக்கிறது. இந்நிலையில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - சசிகலா இணைந்தால் அது திமுகவை எந்தளவில் பாதிக்கும் என்ற விவாதமும் சூடுபிடித்துள்ளது. இதுபற்றி நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகரும், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக பேராசிரியருமான திருநாவுக்கரசு, "கடந்த தேர்தல் வாக்கு கணக்குகள், யூகங்கள் அடிப்படையில் தான் அதிமுக - சசிகலா இணைப்பு, திமுகவிற்கு பாதகமாகுமா என்பதை பற்றி கூற முடியும். ஏனெனில் இணைப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி தற்போது வரை இசைவான கருத்தை தெரிவிக்கவில்லை.

ஒரு வேளை அப்படி இணைந்தாலும் சசிகலா, டி.டி.வி, பழனிசாமி, பன்னீர்செல்வம் இணைந்து தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்வார்களா என்பதும் சந்தேகம் தான். வேறுபாடுகளை தூர எறிந்து ஒருவேளை அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொண்டால், அது நிச்சயம் திமுகவிற்கு பெரிய சவால் தான். ஒன்றுபட்ட அதிமுக, தென் மற்றும் கொங்கு மண்டலங்களில் திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது” என்றார்.

’அதிமுக-சசிகலா இணைந்தால் நிச்சயம் திமுகவிற்கு பெரிய சவால் தான்'

சசிகலா இணைப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்கும் போதெல்லாம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஒரு சொலவடையை அடிக்கடி பயன்படுத்துவார். அது ‘அத்தைக்கு மீசை முளைத்தால்தானே சித்தப்பா ஆவதற்கு...’ என்பார். பொறுத்திருந்து பார்ப்போம், அத்தைக்கு மீசை முளைக்கிறதா என்று.

இதையும் படிங்க: ’ஜனநாயக நாட்டில் யாரும் யாரையும் அடக்குமுறை செய்ய முடியாது': முதலமைச்சர் பழனிசாமி

Last Updated : Feb 11, 2021, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.