ETV Bharat / city

தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு ஏன் கவுன்சிலிங் நடத்தவில்லை - வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக்கூடாது? - நீதிமன்றம் கேள்வி

தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது தொடர்பான வழக்கை ஏன் சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

MHC queries
MHC queries
author img

By

Published : Apr 18, 2022, 7:47 PM IST

சென்னை: கடந்த 2020 - 21ஆம் கல்வியாண்டுக்கு மருத்துவ மேற்படிப்பில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாகக் கூறி, மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி பெறாதவர்களை மருத்துவ மேற்படிப்பில் சேர்த்த விவகாரத்தில், மருத்துவக்கல்வி இயக்குநரக அதிகாரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு? என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ’தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்த, மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன்தான் காரணம். அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பல முட்டுக்கட்டைகள் எழுந்ததால் வழக்குக்கூட பதிவு செய்ய முடியவில்லை' என்றும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதியப்பலன்களை நிறுத்திவைத்த நீதிபதி: இந்த அறிக்கையை மேற்கோள்காட்டிய நீதிபதி, ஓய்வுபெற்ற மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழு முன்னாள் செயலாளர் செல்வராஜனுக்கான ஓய்வூதியப் பலன்களை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டார்.

அதேபோல இந்த முறைகேட்டில் தொடர்புடைய அடையாளம் தெரிந்த, அடையாளம் தெரியாத நபர்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யும்படியும், மருத்துவ கல்வி இயக்குநரக அலுவலர்களுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து செல்வராஜன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது செல்வராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கரோனா காலகட்டத்தில் நடத்தப்பட்ட இரண்டு கலந்தாய்வுகளில் இடங்கள் நிரம்பாததால் தகுதி அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்த தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது எனவும், இந்த முடிவு தனிப்பட்ட முறையில் செல்வராஜன் எடுக்கவில்லை எனவும் வாதிடப்பட்டது.

'தனியார் ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஏன் கவுன்சிலிங் நடத்தவில்லை':அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்திய தேர்வுக்குழு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடத்தாதது ஏன் என கேள்வி எழுப்பினர். பின், கலந்தாய்வு நடத்தாமல் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளதாக தேர்வுக்குழு செயலரின் நடத்தை குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

பணி நீட்டிப்பு ஏதும் வழங்கப்படாத நிலையில், தேர்வுக்குழுச் செயலாளராக செல்வராஜன் பதவியில் தொடர்ந்துள்ளதாகவும், அரசு அதிகாரிகளின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், தீவிரமான இந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக்கூடாது? உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? என்பது குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மு.க. ஸ்டாலின், சபரீசன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.