இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ” மத்திய அரசின் பொதிகை தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்ப ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கேட்க ஆளே இல்லாத ஒரு மொழிக்கு அரசு ஏன் இந்த முக்கியத்துவத்தை வழங்க வேண்டும்? பிறமொழி பேசுவோர் மீது இந்தியைப் போலவே சமஸ்கிருதத்தையும் திணிக்கும் மதவெறிப்பிடித்த பாஜகவின் மொழிவெறி போக்கு எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
நாடு முழுவதும் 24 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டில் 803 பேரும் மட்டுமே சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. வெறும் 803 பேருக்காக ஒரு செய்தி அறிக்கை என்றால், நாடு முழுவதும் பரவியுள்ள தமிழர்களுக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழில் செய்தி அறிக்கை ஒளிபரப்ப மத்திய அரசு உத்தரவிடுமா?
சங்பரிவார்களின் இச்செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த துடிக்கும் மத்திய அரசின் செயலானது, தமிழுக்கும், தமிழர்க்கும் மட்டுமல்லாது அனைத்து பிற மொழிகளுக்கும், அதனை பேசுவோருக்கும் எதிரானதாகும். எனவே, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான இந்த ஆணையை மத்திய பாஜக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் “ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’சமஸ்கிருத மொழி செய்தி அறிக்கை வாசிப்பதை கைவிட வேண்டும்’: வைகோ கண்டனம்