ETV Bharat / city

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது?

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி நவம்பர் மாதம் இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

election commission
author img

By

Published : Nov 7, 2019, 3:50 PM IST

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும், கோரிக்கைகளை தெரிவிக்கவும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும், சிறப்பு அலுவலர்களின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, கடந்த வாரத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 'காணொலிக் காட்சி’ (வீடியோ கான்ஃபரன்சிங்) மூலம் ஆலோசனை நடத்தினார்.

election commission

இந்நிலையில், வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு இயந்திரங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெறத் தொடங்கியுள்ளன. இன்று மாலை 5 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மீண்டும் 'காணொலி காட்சி’ மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

அப்போது, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆலோசனை செய்து, நவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளன. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் உட்கட்சிக் கூட்டங்களை நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 07.11.19

முழு வீச்சில் தொடங்கியது உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகள்.. இன்னும் சில தினகளில் தேர்தல் தேதி அறிவிப்பு..!!

பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு வந்தது. இதனால், பொதுமக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்யவும், கோரிக்கைகளை தெரிவிக்கவும் தங்களுக்கான மக்கள் பிரதிநிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் தங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அதிகரிகளிடம் தீர்வு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்த வண்ணம் இருந்து வந்தது. இதனால் சிறப்பு அதிகாரிகளின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தின. இவற்றிற்கான தீர்வாக இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கடந்த வாரத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அதன்பின்னர், வாக்குச் சாவடி மையங்கள், வாக்கு இயந்திரங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளும் ஜரூராக நடக்கத் துவங்கியுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மீண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட உள்ளார்..

இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா..! தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா..! வேறு என்ன மாதிரியான பணிகள் செய்ய வேண்டியுள்ளது என்பது குறித்தெல்லாம் ஆலோசிக்கப்பட்டு இந்த மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையர் அலுவலக வட்டாரத்தில் உறுதிப்பட தெரிவிக்கின்றனர்..

இதனை உறுதிப்படுத்தும் விதமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியக் கட்சிகளும் தத்தம் தங்களின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் உட்கட்சிக் கூட்டங்களை நடத்துவதில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் மக்கள் தங்களின் பிரச்சினைகளை கொண்டு சென்று தீர்வு காண அவர்களால் அவர்கள் பகுதிகளுக்குத் தேர்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் விரைவில் கிடைக்க தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தினால் போதும் என்கின்றனர் பொதுமக்கள்..

tn_che_01_special_story_of_up_coming_local_body_election_script_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.