ETV Bharat / city

பரிசீலிக்க என்ன இருக்கிறது? உடனே நிராகரியுங்கள்!

சென்னை: ஐஐடி இட ஒதுக்கீடு ஆய்வுக்குழுவின் அறிக்கையை எந்த காலதாமதமுமின்றி உடனடியாக நிராகரிக்க மத்திய அமைச்சரின் கடிதத்திற்கு சு.வெங்கடேசன் எம்பி பதிலளித்துள்ளார்.

su.venkatesan
su.venkatesan
author img

By

Published : Mar 6, 2021, 1:36 PM IST

ஐஐடி மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் நியமனங்களில், இடஒதுக்கீடு முறையாக அமலாவது பற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு, அதன் நோக்கங்களுக்கு எதிரான பரிந்துரைகளை செய்திருப்பதால் அவ்வறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்குமாறு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு அக்குழுவின் அறிக்கை பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் பதில் அனுப்பியுள்ளார். ஆனால் இட ஒதுக்கீடு தொடர்பான அக்குழுவின் அறிக்கையை, கால தாமதமின்றி நிராகரிக்குமாறு சு.வெங்கடேசன் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு அவர் மீண்டும் எழுதியுள்ள கடிதத்தில், "அக்குழு ஐஐடி ஆசிரியர் நியமனங்களை இட ஒதுக்கீடு வரம்பில் இருந்தே நீக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. இட ஒதுக்கீட்டின் வரம்பிற்குள் உதவிப் பேராசிரியர் மட்டும் இருந்தால் போதும்; மற்ற பதவிகளை இட ஒதுக்கீட்டு வரம்பில் இருந்து 'விடுவிக்கலாம்' என்றும் அது பரிந்துரைத்துள்ளது. இந்த இரண்டு முன்மொழிவுகளுமே மத்தியக் கல்வி நிலையங்கள் சட்டம் 2019 ஐ முறையாக அமலாக்குவது பற்றி பேசவில்லை.

ரமேஷ் பொக்ரியாலின் பதிலும், சு.வெங்கடேசனின் பதிலுக்கு பதிலும்...

இட ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படாத பட்சத்தில் அவற்றை பொது இடங்களாக மாற்றுவது குறித்த அக்குழுவின் பரிந்துரைகளும் பொது நெறிகளுக்கும், இது குறித்த அரசாணைகளுக்கும் முரணானதாகவே உள்ளது. இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படாவிட்டால் அடுத்த ஆண்டே பொது இடங்களாக மாற்றப்படலாம் என அக்குழு பரிந்துரைத்துள்ளது. இது ’நிலுவைக் காலியிடங்கள்’ என்ற கருத்தாக்கத்தையே கொன்று, ஒடுக்கப்பட்ட பிரிவினர் பிரதிநிதித்துவத்தில் உள்ள இடைவெளியை நிரந்தரமானதாக்கிவிடும். ஆகவே, அவ்வறிக்கையை முழுமையாக நிராகரிக்கிற முடிவை, சற்றும் காலவிரயமின்றி உடனே எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை: சுற்றறிக்கை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.