ETV Bharat / city

#WeStandwithSurya: 'சூர்யாவிற்கு அரசும், காவல் துறையும் ஆதரவு' - TN Government and Police stand with Jai Bhim Suriya

ஜெய்பீம் (Jai Bhim) திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவிற்கு (Actor Surya) பாமக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மிரட்டல் விடுத்துவரும் நிலையில் தமிழ்நாடு அரசும், காவல் துறையினரும் ஆதரவாக இருப்பதாகத் (#WeStandwithSurya) திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்டச் செயலாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

Jai Bhim
நடிகர் சூர்யா
author img

By

Published : Nov 17, 2021, 4:53 PM IST

Updated : Nov 17, 2021, 10:17 PM IST

சென்னை: ஜெய் பீம் (Jai Bhim) திரைப்படம் தொடர்பாக அப்படத்தில் உள்ள பெயர், குறியீடு தங்கள் சமுதாயத்தை எதிர்மறையாகக் காட்டுவதாக உள்ளதாகக் கூறி வன்னியர் இன மக்கள், பாமக கட்சியினர் உள்ளிட்டோர் நடிகர் சூர்யாவிற்கு எதிராகத் தங்களது கண்டனங்களை விடுத்துவருகின்றனர்.

இப்படம் தொடர்பாக சிலர் அவருக்கு மிரட்டலும் விடுத்துவருகின்றனர். குறிப்பாக மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி என்பவர் நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும், தரை வழியாக எங்கும் பயணம் செய்ய முடியாது வான் வழியாகத்தான் செல்ல முடியும் என்றும் மிரட்டியுள்ளார்.

சூர்யாவிற்கு அரசும், காவல் துறையும் ஆதரவு

இந்நிலையில், பழனிச்சாமி மீது திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளரைச் சந்தித்த மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் உமாபதி, நடிகர் சூர்யா பற்றி பழனிச்சாமி கூறிய கருத்து சாதி வன்மத்தோடு நடந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளதாகவும், தமிழ் சினிமாவில் கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான படங்கள் வெளிவந்து தேசிய விருதுகளைக் குவித்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம் படத்தில் வரக்கூடிய ஒரு சில காட்சிகளால் பாமக கட்சியினர் சாதி ரீதியான மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். பாமக கட்சியினர் எந்த அளவிற்குச் செல்கின்றனரோ அதே அளவிற்கு நாங்களும் செல்ல தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாகத் தமிழ்நாடு அரசும், காவல் துறையினரும் இருப்பதாகக் (#WeStandwithSurya) குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: 'சூர்யாவின் படப்பிடிப்பை நடத்த விட மாட்டோம்' - பாமக வெங்கடேசன்

Last Updated : Nov 17, 2021, 10:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.