சென்னை ஆவடி ஜே.பி எஸ்டேட் அருகே உள்ள சரஸ்வதி நகர் சாலை அமைக்கும் பணிகளை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% உள் ஒதுக்கீடு குறித்து ஐந்து மூத்த அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து பேசி உள்ளனர். அதற்கு கூடிய விரைவில் நல்ல முடிவு வரும்.
அதைத்தொடர்ந்து அவர், "விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் கருத்து வரவேற்கத்தக்கது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு வருவாரா ? பதிலளித்த சந்திரசேகர்