சென்னை: சென்னை தியாகராய நகரில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், தேசியக் கல்விக் கொள்கை 2020 நிராகரிப்பு தேசிய மாநாடு நடைபெற்றது.
இதில், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் மாணவப் பிரதிநிதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டு, தேசிய கல்விக் கொள்கை 2020இன் பாதகமான அம்சங்களை விளக்கினர்.
பின்னர், தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம், கல்வியை அடிப்படை உரிமையாக வழங்கிட வழிச் செய்யும் கொள்கை உருவாக்க வேண்டும், மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கிட வேண்டும், மாநிலங்கள் மீது தனது கொள்கையை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.