சென்னை தலைமைச் செயலகத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் கார்டை இணைப்பது குறித்து தமிழ்நாடு தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆதார் பதிவு செய்யாவிட்டாலும் மற்ற 11 ஆவணங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இடைக்காலத்தில் கட்சியில் நடைபெற்ற கூத்துக்கள் தேர்தல் ஆணையத்தில் பதிவாகவில்லை. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அளித்த கடிதத்தின் அடிப்படையில் கலந்து கொண்டேன்.
அனைத்து கட்சி கூட்டத்தில் எனது முன் இருந்த அதிமுக பெயர் பலகையை தனது பக்கம் எடுத்து வைத்து கொண்டதன் மூலம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று தரமில்லாத செயலை செய்து உள்ளார் என குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பட்டியலினப்பெண்ணிற்கு ஆதரவு: ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த 11 பேர் மீது வழக்குப்பதிவு