ETV Bharat / city

First On:பொறியியல் படிப்பிற்கு இடத்தை ஒதுக்கீடு பெற்று வேறு இடத்திற்கு காத்திருக்கும்போது கட்ட வேண்டியத்தொகை - அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் படிப்பில் மாணவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஏற்றுக் கொண்டு, அவர் விரும்பிய இடத்தில் மேலே உள்ள இடம் கிடைக்குமா? என காத்திருக்கும்போது கட்ட வேண்டியத்தொகையின் விவரத்தை பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 19, 2022, 4:17 PM IST

Updated : Sep 19, 2022, 5:00 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நடந்த பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வுகளுக்குப்பிறகு கிடைத்த இடங்களுக்கு மாறாக விரும்பிய வேறு இடங்களுக்குக்காத்திருக்கும்போது, மாணவர்கள் கட்ட வேண்டிய தொகைகளை பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக்., படிப்பில் சேர்வதற்கு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களில் தகுதியான 1,56,278 பேருக்கான தரவரிசைப்பட்டியல் ஆக.11ஆம் தேதி வெளியிடப்பட்டது. அவர்களில் சிறப்புப் பிரிவினருக்கு ஆக.18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு செப்.10ஆம் தேதி முதல் நவ.17ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. முதல் சுற்றுக்கலந்தாய்வில் பொதுப்பிரிவு, தொழில்பிரிவு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் செப்.15ஆம் தேதி நடைபெற்றது.

அதில் 10,11,12ஆகிய தேதிகளில் மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளின் பட்டியலைப் பூர்த்தி செய்தனர். தற்காலிக ஒதுக்கீடு 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. 13,14ஆம் தேதிகளில் மாணவர்கள் தங்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்தோ அல்லது வேறுக்கல்லூரியில் சேர்வதற்கான விருப்பத்தையோ பதிவு செய்துள்ளனர்.

முதல் சுற்றுக்கலந்தாய்வில் பொதுப்பிரிவில் 14 ஆயிரத்து 546 பேரில் 12,294 பேர் விரும்பும் கல்லூரியை பதிவு செய்தனர். அவர்களில் 11,595 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. 11,626 மாணவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்தனர். 5,233 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கும், 4,269 மாணவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மேலே விரும்பிய இடத்தில் சேரவும், காலியிடம் கிடைத்தால் அளிக்கவும் எனக் கூறியுள்ளனர்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 278 பேர் விரும்பும் கல்லூரியைப் பதிவு செய்து, 185 பேர் கல்லூரிக்கான ஒதுக்கீட்டு இடங்களைத் தேர்வு செய்தனர். 67 மாணவர்கள் கிடைத்த இடத்தில் சேரவும், மேலே விரும்பிய இடம் கிடைத்தால் சேர விரும்புவதாகவும் கூறியுள்ளனர். அதேபாேல் தொழிற்கல்விப்பிரிவில் இடங்களைத்தேர்வு செய்தவர்கள் 22ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.

பொறியியல் படிப்பில் முதல்முறையாக கல்லூரிகளில் ஏற்படும் காலியிடங்களை தவிர்ப்பதற்காக புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும்போதே, மாணவர்கள் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைத்தால் சேரலாம். தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரியில் சேர விரும்புகிறேன் அல்லது மேலே விரும்பிய கல்லூரியில் சேர்வதற்கு இடம் கிடைத்தாலும் சேர்வதற்கு காத்திருக்கிறேன் எனத் தெரிவிக்கலாம். ஒதுக்கீடு பெற்றபின்னர் காத்திருக்கும்போது, பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்த கட்டண விபரம்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்த கட்டண விவரம்

அந்த கட்டண விவரங்கள் வருமாறு,

  • அண்ணாப் பல்கலைக்கழக வளாக கல்லூரிகள், உறுப்புக்கல்லூரிகள் - ரூ.12,000
  • அண்ணாப் பல்கலைக் கழக வளாக கல்லூரி(சுயநிதிப்பாடப்பிரிவு) - ரூ.20,000
  • அரசு பொறியியல் கல்லூரி - ரூ.2,000
  • அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரி - ரூ.4,000
  • அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரி, சுயநிதி பொறியியல் கல்லூரி (சுயநிதிப்பாடப்பிரிவு) - ரூ.25,000
  • அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரி (அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவு) - ரூ.27,500
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - ரூ.20,000

ஏற்கெனவே, விரும்பிய இடத்தைத் தேர்வு செய்து, மேலே பதிவு செய்த கல்லூரியில் இடம் கிடைத்தால் பெறுவதற்கான ஒதுக்கீடு வரும் 25ஆம் தேதி (PROVISIONAL ALLOTMENT FOR UPWARD OPTED CANDIDATES)செய்யப்படும். அதனைத்தொடர்ந்து 2ஆம் சுற்றுக் கலந்தாய்வு செப்.25ஆம் தேதி முதல் அக்.3 ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமன விதி மீறல் - பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

Last Updated : Sep 19, 2022, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.