மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பணப்பட்டுவாடா தொடர்பாக வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்துவருகின்றனர்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் தனது வாக்கை முதல் ஆளாக பதிவு செய்தார். அதேபோல் நடிகர் அஜீத்தும் அவரது மனைவி ஷாலினியும் திருவான்மியூரில் இருக்கும் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.