ETV Bharat / city

நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும் - காவரி விவகாரத்தில் கமல் கருத்து - mnm

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவின் குரலாக அல்லாமல், நீதியின் குரலாக ஒலிக்க வேண்டும் என மநீம தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்
author img

By

Published : Jul 14, 2021, 10:58 PM IST

சென்னை: இது குறித்து அவர் இன்று (ஜூலை 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், "1890ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 130 ஆண்டுகளாக காவிரி விவகாரம் என்பது இரு மாநிலங்களுக்கிடையே தீராத பிரச்னையாக, உறவுகளைச் சீர்குலைக்கும் சிக்கலாக நீடிக்கிறது. 'நடந்தாய் வாழி காவேரி' என்று பாடும் நம்மை 'நின்றாய் நீ காவேரி' என்று வாடும் நிலைக்குத் தள்ளுகிறது கர்நாடக அரசு.

தடையேதுமின்றி ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நதியில் ஏற்கனவே பல அணைகளைக் கர்நாடக அரசு கட்டிவிட்டது. மேலும் ஒரு அணையைக் கட்டி தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வை கேள்விக்குறியாக்க நினைக்கும் கர்நாடக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இருமாநிலங்களும் தங்களுக்குள் தீர்த்துக்கொள்ளமுடியாமல் போகும் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னைகளை உரிய வழிமுறைகளின் மூலம் தீர்த்துவைக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பு, அரசியல்சாசனப் பொறுப்பு மத்திய அரசிற்கு இருக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக மத்திய அரசு அதை உணரவில்லை என்பதே வரலாறு.

என்னதான் நிலைபாடு?

தமிழ்நாட்டின் சார்பாக நமது நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரைச் சந்திக்கும் போது, அவரிடம் உங்கள் விருப்பமில்லாமல் மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்திருந்தார்.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஜல்சக்தித் துறை அமைச்சரைச் சந்தித்தபோது வெகு விரைவில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் என்று உறுதியளித்திருக்கிறார்.

இந்த இரண்டு செய்திகளும் சம்பந்தப்பட்டவர்களால் பத்திரிகையாளர்களிடம் பகிரப்பட்டுள்ளது. அப்படியெனில், ஜல்சக்தித் துறை யாரிடம் சொல்வது உண்மை? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?. அது நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி செயல்படுமா அல்லது ஓட்டு அரசியலுக்கு எது உகந்ததோ அதைச் செய்யுமா?

அநீதி போக்கு

தமிழ்நாட்டுப் பிரதிநிதி சந்திக்கும்போது தமிழ்நாட்டுக் குரலிலும், கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதி சந்திக்கும்போது கர்நாடகக் குரலிலும் பேசுவது தேசத்தின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல். இது அரசியல்சாசனத்தின் மாண்பைக் குலைக்கிறது.

அரசியல் காரணங்களுக்காக காவிரி பிரச்னையில் கர்நாடகத்தின் பக்கமாகவே மத்திய அரசு சாய்ந்திருப்பது வழமை. இந்த அநீதிப் போக்கு இனியும் தொடர்வது நியாயமல்ல. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் குரல் தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும்; நீதியின் குரலாக ஒலிக்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அமித்ஷா பெரிய சங்கி; அண்ணாமலை சின்ன சங்கி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.