ETV Bharat / city

ஒமைக்ரான்... காலதாமதப்படுத்த முடியுமே தவிர கட்டுப்படுத்த முடியாது - வைராலஜிஸ்ட் எச்சரிக்கை - ஒமைக்ரான் தொற்று குறித்து வைராலஜிஸ்ட் ககன்தீப் கங் விளக்கம்

வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடைவிதிப்பதன் மூலம் தொற்றுப் பரவலை காலதாமதப்படுத்த முடியுமே தவிர முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது; ஒமைக்ரான் வகை தொற்று விகிதம் டெல்டா வகையைவிட அதிகமாக இருக்கும் என வைராலஜிஸ்ட் ககன்தீப் கங் தெரிவித்துள்ளார்.

வைராலஜிஸ்ட் ககன்தீப் கங்
வைராலஜிஸ்ட் ககன்தீப் கங்
author img

By

Published : Dec 9, 2021, 6:40 PM IST

கரோனா தொற்று 2019ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ் எனப் பல வகைகளில் உருமாறிய கரோனா வைரஸ் தற்போது ஒமைக்ரான் என்ற புதிய வகையாக உருமாற்றம் அடைந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் முதலில் கண்டறியப்பட்டது.

இந்தியாவில் தற்போதுவரை 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒமைக்ரான் தொடர்பாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும், பிரபல வைராலஜிஸ்டான ககன்தீப் கங்கிடம் மின்னஞ்சல் வாயிலாக சில ஈடிவி பாரத் சார்பாக நாம் வைத்த கேள்விகளும், அதற்கு ககன்தீப் அளித்த பதில்களும் வருமாறு:

ஏற்கனவே உள்ள தடுப்பூசிகள் வேலை செய்யுமா?

  • நமக்குத் தெரியாது, ஃபைசர் தடுப்பூசி இரண்டு தவணைகள் எடுத்துக்கொண்டவர்களுக்கு ஆன்ட்டிபாடியை நியூட்ரலைஸ் செய்வதற்கான தன்மை 40 விழுக்காடு குறைவாக உள்ளது. ஏனைய தடுப்பூசிகளின் செயல்பாடுகளிலும் பெரிய வித்தியாசம் இருக்க காரணம் இல்லை. முக்கியமாகப் பார்க்க வேண்டிய விஷயம் இவை அனைத்தும் ஆய்வகத் தரவுகள்தாம். இந்தத் தொற்று, தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களைத் தாக்கும்போதுதான் தடுப்பூசியின் முழுமையான செயல்பாடுகள் தெரியவரும்.

ஒமைக்ரான் வகை தொற்று விகிதம் என்ன?

  • ஒமைக்ரான் தொற்று விகிதம் மிக அதிகம், இது டெல்டா வகை தொற்றைவிட அதிகமாக இருக்கும். இத்தொற்று எதிர்ப்புச் சக்தியை உடைக்கக்கூடிய வாய்ப்புள்ளதாலும் பரவக்கூடிய தன்மை அதிகம் உள்ளதாலும் தொற்று விகிதம் அகிகமாகவுள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களையும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களையும் மீண்டும் அதிகளவில் தாக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

ஒமைக்ரானால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மத்திய அரசு பயணத் தடைவிதிக்க வேண்டுமா?

  • தடைவிதிப்பதன் மூலம் தொற்றுப் பரவலை காலதாமதப்படுத்த முடியுமே தவிர முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. வெளிநாட்டுப் பயணிகளின் பயணத்திற்கு முந்தைய மற்றும் பயணத்திற்குப் பிந்தைய சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

இந்தத் தொற்று முந்தைய அலையைப்போல் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துமா?

  • ஆரம்பத் தரவுகளின் அடிப்படையில், இது குறைவான ஆக்சிஜன் தேவைகளைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்.

ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டுமா?

  • பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்வது நல்லது. முதியவர்கள், துணை நோய்த்தொற்றுகள் உள்ளவர்கள் ஆரம்பகால பூஸ்டர்களால் பயனடைவார்கள். மேலும் இளையவர்கள் இந்த நோய் தாக்கத்தைச் சமாளித்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.