சென்னை: தலைமைச் செயலகத்தில் நேற்று (பிப். 21) நிதி அமைச்சருடன் நடைபெற்ற கூட்டத்தில் வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா காலகட்டத்தில் வணிகர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டிருந்தது. அந்த வழக்குகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஜிஎஸ்டி-யில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இதை ஒழுங்குபடுத்தி உடனடியாக மாற்றம் செய்து தரப்படவேண்டும் என்று நிதி அமைச்சரிடம் கூறினோம்.
மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து ஜிஎஸ்டிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். கரோனா காலகட்டத்தில் உயிரை கூட மதிக்காமல் பல வணிகர்கள் வேலை செய்து மக்களுக்கு உதவி உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு வ.உ. சிதம்பரனார் பெயரில் விருது வழங்க வேண்டும்.
குட்கா அனைத்து மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தகுந்த வழி வகைகள் தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும். இதனால் பல கோடி ரூபாய் இழப்பு தமிழ்நாடு அரசிற்கு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.
இதையும் படிங்க: கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்குத் தடையில்லை; ஆனால் தேர்தல் முடிவுகள்...?