ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு செயல்பட்டுவருகிறது. இந்தப் பிரிவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் மருத்துவமனைக்கு இன்று வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வுமேற்கொண்டார். பின்னர் அங்கு சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகளிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
அப்போது அவருடன் மருத்துவர்களும் உடன் சென்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவரும் முழு பாதுகாப்பு உடை அணிந்து சென்று, தொற்று பாதித்தவர்களுடன் உரையாடினர்.
கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு அமைச்சர் திடீரென ஆய்வு மேற்கொண்டதுடன், கரோனா வார்டுக்கு நேரில் வந்து நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து நலம் விசாரித்து பேசியது, அங்கிருந்தவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.
இதையும் படிங்க: சென்னையில் 51,641 பேர் கரோனாவிலிருந்து மீண்டனர்!