ETV Bharat / city

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராக விஜய் வசந்த் தேர்வு! - வசந்த் கோ

TN Congress official committee announced

author img

By

Published : Jan 2, 2021, 1:15 PM IST

Updated : Jan 2, 2021, 2:17 PM IST

13:08 January 02

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் இன்று நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக மறைந்த மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு துணை தலைவர்கள், பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூத்தத் தலைவர் தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோரின் மகன்களுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராக ரூபி மனோகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்களாக கோபண்ணா உள்ளிட்ட 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தங்கபாலு மகன் கார்த்தி, திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மறைந்த மக்களவை உறுப்பினர் வசந்த குமார் மகன் விஜய் வசந்த், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தேர்தலுக்காக காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் வாக்குறுதி தயாரிக்கும் குழு தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

மேலும், கட்சியில் ஒருங்கிணைப்புக் குழுவில் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் உள்ளனர். ராமசாமி, சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், செல்லகுமார், மாணிக்கம் தாகூர் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Last Updated : Jan 2, 2021, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.